வெள்ளி, 16 டிசம்பர், 2022

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தென் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

 15 12 2022

Tamil Nadu Weather Forecast: ஒரு வாரத்திற்கு முன்பு, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்கு கடற்கரைகளில் மாண்டஸ் என்ற அரிய டிசம்பர் சூறாவளி பாதித்தது. இப்பகுதி புயலின் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி வங்காள விரிகுடாவில் உருவாகத் தொடங்கியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு-பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலின் அருகிலுள்ள பகுதிகளில் நகர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் (தென்தமிழகம்- ஒருசில இடங்கள், வடதமிழகம்- ஓரிரு இடங்கள்) மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 15ஆம் தேதியில் இருந்து) டிசம்பர் 18ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 சிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்காக எச்சரிக்கை:

அந்தமான் கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் தொடங்கி காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாக குறையக்கூடும்.

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து (டிசம்பர் 16ஆம் தேதி) நாளை காலை வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் மீண்டும் குறைந்து (டிசம்பர் 17ஆம் தேதி) காலை வரை மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலு, அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து இன்று மாலை தொடங்கி நாளை மதியம் வரை காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் மீண்டும் குறைந்து டிசம்பர் 17ஆம் தேதி காலை வரை மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள்: இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும், அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து டிசம்பர் 16ஆம் தேதி காலை முதல் டிசம்பர் 17ஆம் தேதி காலை வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weather-forecast-report-by-rmc-15th-december-559067/