மோடி குடும்பப் பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த மனு சூரத் நீதிமன்றத்தில் நாளை (ஏப்ரல் 3) விசாரணைக்கு வருகிறது.
ராகுல் காந்தியின் 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில், எல்லா நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயருக்கு பின்னால் மோடி என்று வருகிறதே எப்படி என்று விமர்சனம் செய்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சூரத் மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி எச்.எச். வர்மா மார்ச் 23-ம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளி என்று அறிவித்தார். இந்த வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் தனக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி உத்தரவை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது மனுவை நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது.
2019 ஆம் ஆண்டு மோடி என்ற குடும்பப் பெயருடன் திருடர்கள் என்று குறிப்பிட்டு கருத்து தெரிவித்தது தொடர்பாகதொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்று தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச், வர்மா மார்ச் 23 அன்று அளித்த உத்தரவுக்கு எதிராக இந்த மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சூரத் கோர்ட் மாஜிஸ்திரேட் காங்கிரஸ் தலைவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். அதைத் தொடர்ந்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சூரத் நீதிமன்றம் மார்ச் 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ரூ. 15,000 பிணையில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்க ஒப்புதல் அளித்தது. மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு ஒத்திவைத்தது.
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு பேசிய கருத்துக்களுக்காக சுஷில் குமார் மோடி தாக்கல் செய்த மற்றொரு அவதூறு வழக்கையும் ராகுல் காந்தி எதிர்கொள்கிறார். இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஏப்ரல் 12-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மற்றொரு அவதூறு வழக்கையும் ராகுல் காந்தி எதிர்கொள்கிறார். இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஏப்ரல் 12-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-appeals-against-2-year-jail-in-defamation-case-surat-court-hear-tomorrow-626265/
2 4 2023