புதன், 19 ஏப்ரல், 2023

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு!

 19 4 23

சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்க்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம்,  சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் சோதியக்குடி மற்றும் கோபால சமுத்திரம் கிராமங்களில் 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது. கோயிலுக்கு எந்த வருவாயும் இன்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

எனவே மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் திருக்கோயில் நில ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் பறிமுதல் செய்ப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இந்த நிலங்களை மீட்பதற்காக மயிலாடுதுறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் விஏஓ சங்கீதா முன்னிலையில், கோயில் செயலாளர் அன்பரசன், ஆய்வாளர் பிரனேஷ், கணக்கர் ராஜி ஆகியோரால் சொத்துக்கள் மீட்கப்பட்டது.

சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இந்த நிலங்கள் இணை ஆணையரின் அனுமதி பெற்று கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அந்த இடத்தில் தகவல் பலகையும் வைக்கப்பட்டது.

—அனகா காளமேகன்

source https://news7tamil.live/recovery-of-4-acres-of-temple-land-belonging-to-hindu-religious-charities-department.html

Related Posts: