திங்கள், 3 ஏப்ரல், 2023

இந்தியாவில் 59 தரமற்ற மருந்துகள் விற்பனை; விவரங்கள் இணையத்தில் வெளியீடு

 3 4 23

Medicine

சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 59 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 1,251 மருந்துகள் ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளி, கால்சியம், இரும்புச்சத்து, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

தரமற்ற அந்த மருந்துகளின் விவரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/substandard-medicine-in-india-fever-cold-cough-medicine-626857/