03.04.2023
காரைக்கால் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அதிகரிக்கும் கொரோனா
தொற்று பரவலால் 35 வயது பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலால் மாவட்ட நலவழித்துறை சார்பில் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலால் மாவட்ட நலவழித்துறை சார்பில் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரபடுத்தப்பட்டது இந்த நிலையில் கடந்த வாரத்தில் 20 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சுகாதாரத்துறை கண்டறிந்தனர். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் நலவழித் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் வசிக்கும் 35 வயது பெண்
ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து காரைக்கால் நகரப் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை நலவழித் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். கொரோனா தொற்று காரைக்கால் மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் இல்லாத நிலை உள்ளது.
காரைக்காலுக்கு தேவையான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளதாகவும்,
புதுச்சேரிக்கு ஒதுக்கீடு வந்தவுடன் காரைக்காலில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து சமூக
இடைவெளியை பின்பற்ற வேண்டுமென நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர்
சிவாரஜ்குமார் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/increasing-spread-of-corona-infection-in-karaikal-35-year-old-woman-died-without-treatment.html