ஞாயிறு, 21 மே, 2023

தமிழக கல்விக் கொள்கை உருவாக்க 2 புதிய உறுப்பினர்கள் நியமனம்: அன்பில் மகேஷ் அறிவிப்பு

 20 5 2023 

anbil mahesh

மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக குழுவில் இரண்டு புதிய உறுப்பினர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

சென்னை, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்திற்கு என்று தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதை தொடர்ந்து, மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் இன்று குழு அமைக்கப்பட்டது.

இதில், மாநில கல்விக் கொள்கை உருவாக்கும் உயர்மட்டக்குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி, காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் ஃப்ரீடா ஞானராணி மற்றும் சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பழனி ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/education-jobs/state-education-policy-development-committee-have-two-new-members-674200/

Related Posts: