திங்கள், 15 மே, 2023

வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதேசம் அருகே ”மோக்கா” புயல் கரையை கடந்தது..!!!

 14 5 23

‘மோக்கா’ புயல் மிக அதிதீவிர புயலாக வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடற்கரைகளை கடந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்ற மோக்கா புயல் இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி 150 கி.மீ. முதல் 175 கி.மீ. வேகத்தில் கடக்கக்கூடும் என இன்று காலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் அதி தீவிர மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடற்கரைகளை கடந்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் அதி தீவிர மோக்கா புயல் தீவிர புயலாக வலுவிழக்கும்.

இந்த புயலானது வடகிழக்கு வங்கக் கடலில் கடந்த 3 மணி நேரத்தில் 25 கிமீ வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மியான்மர் மற்றும் காக்ஸ் பஜார்
இடையே வடக்கு மியான்மர்-தென்கிழக்கு வங்கதேச கடற்கரையை கடந்தது.

கரையை கடக்கும் போது 180-190 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 210 கிமீ வேகத்தில் வீசியது. குறிப்பாக புயலானது நண்பகல் 12.30 முதல் 2.30 மணி வரை கரையை கடந்தது.

தற்போது, சிட்வேக்கு (மியான்மர்) வடக்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு (பாங்லேஷ்) தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் உள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் அதி தீவிர மோக்கா புயல் தொடர்ந்து தீவிரப் புயலாக அடுத்தடுத்து வலுவிழக்கக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


source https://news7tamil.live/mystery-person-hypnotized-me-upi-scam-for-rs-40000-lost-journalist-says-shocking-information.html