வியாழன், 4 மே, 2023

கர்நாடகா: தேர்தல் அறிக்கையில் யார் பெஸ்ட்? நேரடி ஒப்பீடு

 3 5 23

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிடவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
அதேசமயம் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், இடஒதுக்கீடு உச்ச வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், மதம், சாதியின் பெயரால் வெறுப்பை பரப்பும் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தவிர பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் அன்னா (உணவு), அபயா (சமூக நலன்), அக்ஷரா (கல்வி), ஆதாரம் (வருமானம்) உள்ளிட்டவற்றை பட்டியலிட்டுள்ளது.
மேலும், விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் தொழில் உள்ளிட்டவற்றையும் பட்டியலிட்டுள்ளது. காங்கிரசை பொறுத்தவரை க்ருஹ ஜோதி, க்ருஹ லக்ஷ்மி, அன்ன பாக்யா, யுவ நிதி மற்றும் சக்தி ஆகிய ஐந்து உத்தரவாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதாவது, நிர்வாகம், சட்டம் மற்றும் நீதி, பிராந்திய மற்றும் கிராமப்புற வளர்ச்சி, நீர்ப்பாசனம் மற்றும் செல்வத்தை உருவாக்குதல் போன்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் பாரதிய ஜனதா அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பிரிவில், யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகைகளின் போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் (பிபிஎல்) ஆண்டுதோறும் மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என உறுதிப்படுத்தி உள்ளது.
தொடர்ந்து ஏழைகளுக்கு வீடுகள் கட்டி வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு தெருவில் “அடல் ஆஹாரா கேந்திரா” அமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு பிபிஎல் குடும்பத்திற்கும் அரை லிட்டர் நந்தினி பால் மற்றும் மாதாந்திர ரேஷன் கிட்கள் வழங்கப்படும் போஷனே திட்டத்தை கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, சிங்கப்பூர் மாதிரியை துமகுரு மற்றும் ஹுப்பள்ளி-தார்வாட் போன்ற நகரங்களில் பைலட் அடிப்படையில் பின்பற்றவும்” கட்சி உறுதியளித்துள்ளது.

காங்கிரஸை பொறுத்தமட்டில் பட்டியலிடப்பட்ட சாதியினர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.கள்) “நம்பிக்கை மற்றும் அபிலாஷைகளுக்கு இடமளிக்கும் வகையில்” இடஒதுக்கீடு உச்சவரம்பை 50-லிருந்து 75% ஆக உயர்த்துவதற்கான திட்டங்களை குறிப்பிட்டுள்ளது.
மேலும், SC இடஒதுக்கீட்டை 15% லிருந்து 17 % ஆகவும், ST ஒதுக்கீட்டை 3% லிருந்து 7% ஆகவும் உயர்த்துவதாக கூறியுள்ளது.

மேலும் பசவராஜ் பொம்மை அரசால் ரத்து செய்யப்பட்ட முஸ்லிம் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டும். 2011ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசு மேற்கொண்ட சமூக-பொருளாதார மற்றும் ஜாதி மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவை வெளியிடுவதாகவும், நீதிபதி சதாசிவா ஆணையத்தின் தரவை வழங்குவதாகவும் கட்சி உறுதியளித்துள்ளது.
தொடர்ந்து, அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து எஸ்சி-எஸ்டி குடும்பங்களுக்கும் வீடு வழங்குவதாகவும் கூறியுள்ளது.

இதேபோல் தொழிற்சாலை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் தனித்தனி திட்டங்களை காங்கிரஸிம், பாஜகவும் அறிவித்துள்ளன.


source https://tamil.indianexpress.com/india/examining-the-bjp-and-congress-manifestos-in-karnataka-a-comparative-look-658752/