4 5 23
கர்நாடக மாநிலம் பீதரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து அவரை கடுமையாக விமர்சித்தார். பொதுக்கூட்டத்தில் கார்கே, “பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஏழை தாயின் மகன் என்கிறார்.
காங்கிரஸ் என்னை 91 முறை துஷ்பிரயோகம் செய்தது என்கிறார். இவ்வாறு அவர் பேசுவது முதல் முறையல்ல. தொடர்ந்து, காங்கிரஸ் மீது இந்தக் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.
நீங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால் மற்றவர்கள் யார்? மேலும், நான் என்ன நீங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறினேனா?
ஆனால் நான் எப்போதும் ஒரு கடின உழைப்பாளியின் மகன் என்று சொல்வேன். நான் யாரையும் நம்பி வாழ்ந்ததில்லை. என் தந்தை கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் என்னை வளர்த்தார், என்னை படிக்க வைத்தார்.
மேலும் அநீதி இழைப்பவர்களை எதிர்த்து போராடவும் கற்றுக் கொடுத்தார். உங்களிடம் ஆர்எஸ்எஸ், பிஜேபி மற்றும் 40% கமிஷன் ஆட்கள் உள்ளனர், ஆனால் நீங்கள் இன்னும் அழுகிறீர்கள்? என்றார்.
தொடர்ந்து, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். மாறாக அழாதீர்கள் என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்தில் பரப்புரை மேற்கொண்ட போது, காங்கிரஸ் என்னை இதுவரை 91 முறை காயப்படுத்தியுள்ளது எனக் கூறினார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் அழும் பிரதமர், கமிஷன் முதல்வர் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
source https://tamil.indianexpress.com/india/kharges-sharp-attack-on-modi-you-are-pm-dont-cry-just-answer-our-questions-658807/