ஒரு சிலர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து சமைக்க முயற்சி செய்கிறார்கள் மற்றும் சிலர் இணையத்தில் இருந்து சமையல் குறிப்புகளைப் பார்க்கிறார்கள். நீங்களும் அதில் ஒருவரா? அப்படியானால் இது உங்களுக்குத்தான். சிறந்த சமையல் பள்ளிகளில் மட்டுமே கற்பிக்கப்படும் சில ரகசிய குறிப்புகள் இங்கே உள்ளன. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
ஆம்லெட் சமைக்க
ஒவ்வொறுமுறை சமைக்கும் போதும், ஆம்லெட் கடாயில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா? ஆம் எனில், இந்த உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சரியான ஆம்லெட் பெறுவதற்கான சிறந்த வழி, கடாயை சூடாக்கி, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து, பின்னர் முட்டையைச் சேர்ப்பதாகும். முட்டையை ஒருபோதும் குறைந்த அல்லது அதிக சூடான பாத்திரத்தில் சேர்க்க வேண்டாம்.
கூடுதல் எண்ணெய் சேர்க்காமல் இறைச்சி சமைக்க
இறைச்சியில் கூடுதல் எண்ணெய் சேர்க்காமல் சமைக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கடாயை சூடாக்கி, ஒரு பக்கத்தில் மாமிசத்தைச் சேர்க்கவும், இதனால் கொழுப்பு வெளியேறும், மேலும் அதிகப்படியான எண்ணெய் இல்லாமல் இறைச்சி அதன் கொழுப்பில் சமைக்கப்படும்.
பஞ்சுபோன்ற உருளைக்கிழங்கு
நீங்கள் கிரீம் மேஷ்டு உருளைக்கிழங்கு விரும்பினால், வேகவைத்த உருளைக்கிழங்கை ஒரு வாணலியில் குறைந்த தீயில் உலர வைக்கலாம், இதனால் கொதித்த பிறகு மீதமுள்ள தண்ணீர் ஆவியாகிவிடும். ஆனால் அவற்றை வறுக்காதபடி கவனமாக செய்யுங்கள். பஞ்சுபோன்ற கிரீமி உருளைக்கிழங்கு கிடைக்கும்.
அடுத்தமுறை சமைக்கும்போது மறக்காமல், இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்!a
source https://tamil.indianexpress.com/lifestyle/cooking-hacks-fried-egg-recipe-dosa-butter-potato-meat-cooking-recipes-668842/