கூகுள் அதன் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் ஐ.ஓ 2023 நிகழ்ச்சியில் WearOS 4 அறிமுகப்படுத்தியது. மேலும், WearOS 4
உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் வாட்ச் தளம் என்பதை உறுதிப்படுத்தியது. கூகுள் தற்போது மெட்டா நிறுவனத்துடன் இணைந்து வாட்ச் ஓ.எஸ்ஸிற்கான வாட்ஸ்அப்பை உருவாக்க உள்ளது. இது விரைவில் கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் வாட்ச் 5 சீரிஸ் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு வழங்கப்பட உள்ளது.
Wear OS 4 ஆனது கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ஆகியவற்றிற்கு கஸ்டம் OneUI வழங்குகிறது. வாட்ச் ஓ.எஸ்ஸில் அனைத்து விதமான அப்டேட்களும் வழங்குகிறது.
உங்கள் ஸ்மார்ட் வாட்சில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி இருந்தால் முதலில் அதை உங்கள் போனுடன் இணைக்க வேண்டும். பின் WearOS பீட்டா வெர்ஷன் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
WearOS ஸ்மார்ட் வாட்சில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்வது எப்படி?
- கூகுள்பிளே ஸ்டோர் சென்று ‘வாட்ஸ்அப்’ என சர்ச் செய்யவும்.
- இப்போது Available on more devices என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்யவும்.
- உங்கள் வாட்ச்சில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும் என்றால் அதை உங்கள் வாட்சில் பார்க்க முடியும்.
- இன்ஸ்டால் பட்டன் கிளிக் செய்து கொடுத்தால் உங்கள் வாட்ச்சில் வாட்ஸ்இப் இன்ஸ்டால் செய்யப்படும்.
- ஆக்டிவ் நெட்வொர்க் கனெக்ஷன் இருக்கும் பட்சத்தில் உங்கள் ஸ்மார்ட் வாட்ச்சில் மெசேஜ் வரும் அதற்கு நீங்கள் பதிலும் அளிக்கலாம்.
source https://tamil.indianexpress.com/technology/how-to-setup-and-install-whatsapp-on-your-wearos-smartwatch-669235/