சனி, 25 செப்டம்பர், 2021

WHO புதிய சுற்றுச்சூழல் மாசுபாடு விதிகள்: இந்தியாவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்?

24 09 2021 What new WHO pollution norms mean for India : உலக சுகாதார நிறுவனத்தால் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள புதிய காற்று தர விதிமுறைகள் இந்தியாவில் காற்று மாசுபாடு குறித்து புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்த விதிமுறைகள் ஏற்கனவே இருந்த விதிமுறைகளின் கீழ் இருந்ததை விட இந்தியாவை மோசமாக்கும். தற்போதை நிலவும் நிலமையுடன் ஒப்பிடுகையில் பழைய உலக சுகாதர அமைப்பின் விதிமுறைகளை இந்தியாவால் எட்ட முடியாது. புதிய தரத்தை மிகவிரைவில் அடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

அதையும் தாண்டி, திருத்தப்பட்ட தரநிலைகள் பெருகிவரும் அறிவியல் சான்றுகளின் ஒப்புதல் ஆகும், இது முன்னர் அறியப்பட்டதை விட காற்று மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான ஆபத்தை அதிகமாக சுட்டிக்காட்டுகிறது. எனவே, இந்த அபாயங்களைத் தணிப்பதற்கும் உயிர்ச்சேதத்தைத் தடுப்பதற்கும் பொருத்தமான நடவடிக்கை அதிக கவனம் செலுத்தும் முயற்சியாக இருக்கும்.

உடனடி தீர்வு இல்லை

ஒருங்கிணைந்த முயற்சியை உடனடியாக மேற்கொண்டாலும் கூட இந்தியாவின் காற்றின் தரத்தில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பில்லை. காற்றின் தரம் பல்வேறு செயல்பாடுகளை பொறுத்து அமைந்துள்ளது. மேலும் வளங்கள் மூலமாக கையாளப்பட வேண்டும். உதாரணமாக, சுற்றுப்புறம் அசுத்தமாக இருக்கும் போது அல்லது சாலைகளின் தரம் நன்றாக இல்லாத போது, ​​சுத்தமான காற்றை எதிர்பார்க்க முடியாது.

மேலும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சி, வேறு சில குறிக்கோள்களுடன் நேரடியாக மோதுகிறது. அதாவது நம்முடைய தொழில்கள் குறுகிய காலத்தில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ம். குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு மிகவும் கடுமையான உமிழ்வு விதிமுறைகளை அமல்படுத்துவதில் மீண்டும் மீண்டும் தளர்வுகள் அல்லது காலக்கெடு நீட்டிப்புகள் அறிவிக்கப்பட்டதற்கு இதுவே காரணமாகும்.

ஆனால் பல பகுதிகளிலும் சுத்தமான காற்று, ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் விளைவுகளால் வருகிறது. தூய்மை இந்தியா, நமாமி கங்கை மற்றும் இதர ஆறுகள் மற்றும் ஏரிகளை சுத்தம் செய்யும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி, நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளை உருவாக்குதல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கான உந்தல்கள் போன்ற பல முக்கிய அரசாங்க திட்டங்கள் காற்றின் மாசுபாடு குறித்த விவாதங்களின் மையமாக இருக்கும் மெட்ரோக்கள் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காற்றின் தரத்தை உயர்த்த உதவும்.

பாரம்பரிய சமையல் எரிபொருள் நிரந்தரமாக எல்.ஜி.பி.யால் மாற்றப்படுவதற்கு உதவிய உஜ்வாலா திட்டம் ஏற்கனவே பல மாற்றங்களை உருவாக்க துவங்கியுள்ளது. உட்புற காற்று மாசுபாட்டின் உடல்நல பாதிப்புகள் இப்போது கூட நன்கு விவாதிக்கப்படவில்லை. ஆனால் ஆய்வுக்குப் பிறகு ஆய்வு அது வெளிப்புற காற்று மாசுபாட்டைப் போலவே பெரிய அளவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பலன்கள்

இந்த அனைத்து திட்டங்களிலும் ஒரு உந்துதல் தரப்பட்டாலும் கூட முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருக்கும். இந்த உணர்தல் இந்தியாவின் தேசிய சுத்தமான காற்று திட்டத்திலும் பிரதிபலிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கான இலக்குகள் மிகவும் மிதமானவை மற்றும் அவற்றை அடைய பல ஆண்டுகள் ஆகும்.

ஆனால் சில திட்டங்கள் குறுகிய காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். இது செயல்படுத்த எளிமையானது, மேலும் செலவு குறைந்தது. ஆனாலும் அவற்றிற்கு தேவையான கவனம் செலுத்தப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நாடு முழுவதும் ஏராளமான கட்டுமானங்கள் நடக்கின்றன – வீடுகள், சாலைகள், வணிக மையங்கள், விமான நிலையங்கள் – இது இரண்டு தசாப்தங்களாக தொடர வாய்ப்புள்ளது.

இந்தியா இது போன்ற கட்டுமானங்களை இன்னும் சுகாதாரமற்ற முறையில் தான் செய்கின்றன. கட்டுமானம் நடைபெறும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு மூடப்படுவது கிடையாது. கட்டுமான பொருட்கள் மற்றும் உடைக்கப்பட்ட பகுதிகள் பொதுவெளியில் வைக்கப்பட்டு, திறந்த ட்ரக்குகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து கட்டுமானங்களும் தூசி நிரம்பிய பகுதிகளாகவே காணப்படுகிறது.

இந்தியாவின் சாலைகள் அடிப்படை கட்டுமான தளங்களுடன் ஒத்துப்போகவில்லை. சாலைகளின் மூலைகள் சரியாக அமைக்கப்படவில்லை, இது மிகவும் தீங்கு விளைவிக்கும் துகள்களின் வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது. நடைபாதைகள் மற்றும் ட்வைடர்கள் அதிக அளவு தூசியை உருவாக்குகின்றன.

உள்ளூர் நகராட்சி அமைப்புகள் விரும்பினால் இவற்றை சரிசெய்வது எளிது. மேலும் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/what-new-who-pollution-norms-mean-for-india-345674/