புதன், 10 மே, 2023

ரஷ்யா மீண்டும் பெரிய போரை எதிர்கொண்டு வருகிறது – அதிபர் புதின்

 9 5 23

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா சோவியத் யூனியன் வெற்றிப்பெற்ற தினம், அந்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 1945ல் மே 8ம் தேதி இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் நேச நாடுகள் சரணடைந்தன. இதையடுத்து ஆண்டுதோறும் மே 9ம் தேதியை ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியை குறிக்கும் வெற்றி நாளாக ரஷ்யா கொண்டாடி வருகிறது.போரில் உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் நாள் என்பதுடன், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடிய வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்த தினம் இங்கு கொண்டாடப்படுகிறது.

உலக போர் வரலாற்றில் ஒரு போரில் ஒரு நாட்டின் மக்கள் அதிகம் உயிரிழந்ததென்றால், அது ரஷ்யா தான். அதனால்தான் இந்த வெற்றி நாளை, ரஷ்யாவின் மிக முக்கியமான பொது விடுமுறை நாட்களில் ஒன்றாக கருதி அந்நாட்டு மக்கள் இந்த தினத்தை தவறாது கடைப்பிடித்து வருகின்றனர். அப்படிப்பட்ட இந்த நாளில், இரண்டாம் உலக போரில் ரஷ்யா ஜெர்மனியிடம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், இராணுவ அணிவகுப்பு மற்றும் இறந்த இராணுவ வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக, தலைநகர் மாஸ்கோவில் உள்ள சிவப்பு சதுக்கத்தில் ராணுவ வீரர்களின் வெற்றி நாள் அணிவகுப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது. இதையடுத்து வாணவேடிக்கை உள்ளிட்ட கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய அதிபர் புதின், ரஷ்யா தற்போது மீண்டும் ஒரு பெரிய போரை எதிர்கொண்டு வருவதாகவும், இதில் அமைதியான முடிவு ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நேரம், இன்னொரு நிகழ்வில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மயின் நாசிப்படை தோற்றது போல், ரஷ்யா உக்ரைனிடம் தோற்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா

source https://news7tamil.live/russia-is-currently-facing-a-major-battle-again-president-putin.html

Related Posts: