வெள்ளி, 30 ஜூன், 2023

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசியல் வேறுபாடுகள் தடையாக இருக்கக்கூடாது! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசியல் வேறுபாடுகள் தடையாக இருக்கக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டால் தங்களுக்கு சலுகைகள் பாதிக்கப்படும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. கடந்த 50 நாட்களாக அங்கு கலவரம் நீடிக்கிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 350 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இரு நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் தொடர்ந்து முன்னேறி செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் இம்பால் திரும்பினார்.

ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இதனை அடுத்து ராகுல் காந்தி பொதுமக்களை சந்திக்க, ஹெலிகாப்டர் மூலம் செல்லலாம் என அனுமதிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு படையினரின் அறிவுறுத்தல்களை நிராகரித்து சாலை மார்க்கமாகத்தான் செல்வோம் என ராகுல் தரப்பு பிடிவாதம் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் ஒருவழியாக ஹெலிகாப்டர் மூலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்தார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மணிப்பூரில் உள்ள குடும்பங்களின் வாழ்வில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில், நம்மை அவர்களின் குடும்பத்தில் ஒருவராக கருதி செயல்படுவது நமது கூட்டுப் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.

அதோடு அவர்களின் வாழ்வில் அமைதியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளுக்கு அரசியல் வேறுபாடுகளோ அல்லது வேறு தடைகளோ ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். ராகுல் காந்தியை மணிப்பூரில் தடுத்து நிறுத்தியது அங்கு அமைதியை நிலைநாட்டுவதை தடுப்பதாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மணிப்பூரில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் குரல்களுக்கு செவிசாய்ப்போம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


source https://news7tamil.live/political-differences-should-not-stand-in-the-way-of-ending-the-manipur-riots-cm-stalin.html

சங்கர் ஜிவால் ஐபிஎஸ்! அவர் கடந்து வந்த பாதை என்ன?

 

தமிழ்நாடு காவல்துறையின் உச்சபட்ச பொறுப்பான சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர் ஜிவால் கடந்து வந்த பாதை

1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா என்ற பகுதியைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் படித்தவர். அதில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியில் புலமை பெற்றவர்.

சங்கர் ஜிவால் 1993 ஆம் ஆண்டு ஏஎஸ்பியாக மன்னார்குடியில் தனது பணியை தொடங்கினார். இதன் பிறகு 1994 ஆம் ஆண்டு சேலம் புறநகர் ஏஎஸ்பி, 1995 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட போலீஸ் எஸ்பி, 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி, 1997 ஆம் ஆண்டு மதுரை நகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் COMMANDANT, 1999 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பியாக பணியாற்றினார்.

இதையடுத்து 2000 ஆம் ஆண்டில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குனர், 2004 ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதை பிரிவில் பணியை தொடர்ந்தார் சங்கர் ஜிவால். இதன் பிறகு அவர் 2006 ஆம் ஆண்டு திருச்சி காவல் ஆணையர், 2008 ஆம் ஆண்டு மாநில உளவுத்துறை டிஐஜியாக பணியாற்றி உள்ளார்.

பிறகு 2008 ஆம் ஆண்டு சங்கர் ஜிவால் ஐஜியாக பதவி உயர்வு பெற்று உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு மாநில உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு மாநில உளவுத்துறை ஐஜியாக மாற்றப்பட்டு பணியை தொடர்ந்தார்.

2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு சங்கர் ஜிவால் சிறப்பு அதிரடி படை ஐஜியாக மாற்றப்பட்டார். 3 ஆண்டுகள் உளவுத்துறையில் பணியாற்றி அதிக அனுபவம் பெற்றவர் சங்கர் ஜிவால். 2015 ஆம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிறப்பு அதிரடி படையிலேயே பணியை தொடங்கினார்.

2017 ஆம் ஆண்டு ஆவின் துறையில் விஜிலென்ஸ் பிரிவிலும், 2019 ஆம் ஆண்டு ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றினார். இதன் பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறையின் புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து அரசு அறிவித்துள்ளது. சென்னை காவல்துறையின் காவல் ஆணையராக 2 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், தற்போது காவல்துறையின் உச்சபட்ச பொறுப்பான சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்

source https://news7tamil.live/who-is-this-shankar-jiwal-ips-what-path-did-he-take.html

அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

 30 6 23

அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது : “ஆளுநர் சர்வாதிகாரி போன்று செயல்படுகிறார்.ஜனநாயகம் இருக்கா இல்லையா என்பது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும் ஆளுநருக்கு அமைச்சரை டிஸ்மிஸ் செய்வதற்கு அதிகாரம் கிடையாது. சட்டரீதியாக இதனை சந்திப்போம்.

ஆளுநர் தனது வரம்பை மீறி செயல்படுகிறார் இது நல்லதுக்கு அல்ல. அவருடைய அதிகாரம் என்ன என்பது அவருக்கே தெரியவில்லை அமைச்சரவை கூடி என்ன முடிவு செய்கிறதோ அதை ஒப்புக்கொண்டு தன்னுடைய ஒப்புதலை தருவதுதான் ஆளுநரின் கடமை.


பாஜகவின் அடிமையாக உள்ள அதிமுக போன்ற கட்சிகள் மீது மீதான அமலாக்கத்துறை
நடவடிக்கை எடுப்பது கிடையாது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடத்திய போது கட்டு கட்டாக ஆவணங்கள் வெளியில் தூக்கி வீசப்பட்டது.  இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர் இதுபோன்று அமைச்சர்களை நீக்க முடியுமா?இதற்கு முற்றுப்புள்ளி என்பது 2024 தேர்தல் தான். மக்கள் முடிவு செய்வார்கள்” என ரகுபதி கூறினார்.


source https://news7tamil.live/governor-has-no-power-to-dismiss-minister-minister-raghupathi.html

NEET UG 2023: தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்; விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி தேதி

 28 6 23

தமிழ்நாடு NEET UG 2023 கவுன்சிலிங்: இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG 2023 கவுன்சிலிங் செயல்முறைக்கான பதிவு செயல்முறையை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) தொடங்கியுள்ளது. இயக்குனரகம் MBBS / BDS பட்டப்படிப்புகளில் சேர்க்கைக்கான தமிழ்நாடு நீட் 2023 சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த பட்டப் படிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnmedicalselection.net/ இல் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மேனேஜ்மெண்ட் மற்றும் அரசு ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது, மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் உள்ளது.

தமிழ்நாடு NEET UG 2023 கவுன்சிலிங்: விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு நிரப்புவது?

படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்- https://tnmedicalselection.net/

படி 2: முகப்புப்பக்கத்தில் MBBS மற்றும் BDS பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: முதலில் தகவல் குறிப்பேட்டைப் படித்துவிட்டு விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 4: பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பல போன்ற உங்கள் விவரங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.

படி 5: பதிவு செய்தவுடன், உங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்

படி 6: உங்கள் விவரங்களை நிரப்பவும், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்

படி 7: சேமித்து, சமர்ப்பித்து, கட்டணத்தைச் செலுத்தவும்

படி 8: எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்

விண்ணப்பப் படிவக் கட்டணம் ரூ. 500 மற்றும் அதை இணையதளங்களில் உள்ள வங்கிப் பேமெண்ட் போர்டல் மூலம் ஆன்லைன் பேமெண்ட் மூலம் செலுத்த வேண்டும். மாணவர்கள் சுற்று 1, பொதுச் சுற்று மற்றும் துணை சுற்றுக்கு பதிவு செய்யலாம். 2வது சுற்றுக்கு புதிய பதிவுகள் அனுமதிக்கப்படாது. கவுன்சிலிங் மற்றும் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்படும் தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

நீட் தேர்வில் பெற்ற தரவரிசையின் அடிப்படையில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். தரவரிசைப் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும், மேலும் முடிவுகள் தனித்தனியாக மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படாது.

source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-neet-ug-2023-counselling-registration-process-begins-tnmedicalselection-net-710227/

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்வு

 29 6 23

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் குறிப்பேட்டில் (Prospectus) குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் செயல்முறைக்கான விண்ணப்பப் பதிவுச் செயல்முறை தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி தேதியாகும். மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் ஆன்லைன் விண்ணப்பங்களின் தொடக்க நாளில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க 3,900 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,200 பேர் கட்டணம் செலுத்தி முடித்துள்ளனர்.

மே மாதம் நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மொத்தம் 78,693 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர். நீட் மதிப்பெண்கள் பாரா மெடிக்கல் மற்றும் ஆயுஷ் படிப்புகளின் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தவிர) சேர்க்கைக்கும் பயன்படுத்தப்படும்.

இந்தநிலையில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் குறிப்பேட்டில் (Prospectus) குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் குறிப்பேட்டின் படி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கடந்த ஆண்டை விட இந்த கல்வியாண்டில் ரூ.2,000 கூடுதலாக செலுத்துவார்கள். இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் (MBBS) மாணவர்கள் கல்விக் கட்டணமாக ரூ. 6,000 செலுத்துவார்கள். மொத்தக் கட்டணம் கடந்த ஆண்டின் ரூ.13,610 லிருந்து ரூ.18,093 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், பி.டி.எஸ் (BDS) மாணவர்கள் கல்விக் கட்டணமாக கடந்த ஆண்டு ரூ.2,000 செலுத்திய நிலையில், இந்த ஆண்டு ரூ.4,000 செலுத்துவார்கள். பல் மருத்துவ மாணவர்கள் மொத்தக் கட்டணமாக கடந்த ஆண்டு ரூ.11,610 செலுத்திய நிலையில், இந்த ஆண்டு ரூ.16,073 செலுத்துவார்கள்.

அதேநேரம், சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை கட்டணம் நிர்ணயிக்கும் குழு நிர்ணயிக்கும். இதுவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ.எஸ்.ஐ.சி., மருத்துவக் கல்லுாரி கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

”அரசு ஒதுக்கீடு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த ஆண்டை விட தகவல் குறிப்பேடு மிகவும் விரிவானது. சொற்களஞ்சியம், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவு மற்றும் கவுன்சிலிங் செயல்முறை குறித்த தகவல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் செயல்முறையை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த அட்டவணை நிரலும் கொடுக்கப்பட்டுள்ளது,” என்று தேர்வு செயலாளர் ஆர்.முத்துசெல்வன் கூறினார்.

குறிப்பிடப்பட்ட பள்ளிகளில் படித்ததை நிரூபிக்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியர்களிடமிருந்து ஒரு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு மாணவர்கள் முதன்மைக் கல்வி அதிகாரியிடமிருந்தும் ஒரு கடிதத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த விதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. பெற்றோர் அடையாளச் சான்று வழங்க வேண்டிய அவசியத்தையும் தகவல் குறிப்பேடு வழங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 5,050 மருத்துவ இடங்கள் உள்ளன, அதில் 15% அகில இந்திய தொகுப்பிற்காக சுகாதார சேவைகள் இயக்குநரிடம் ஒப்படைக்கப்படும். மூன்று புதிய சுயநிதிக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி பெற்றதாகக் கூறியிருந்தாலும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் இருந்து முறையான தகவல் பரிமாற்றத்திற்காக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், கே.கே. நகரில் உள்ள ESIC கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்கள் வழங்கப்பட்டுள்ளதால் அதன் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.

DGHS இன்னும் இணைய போர்ட்டலை திறக்கவில்லை, ஆனால் அனைத்து மாநிலங்களும் ஒரே நேரத்தில் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 10 மாலை 5 மணி. முதல் சுற்று கவுன்சிலிங் ஜூலை இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-govt-medical-colleges-mbbs-bds-tuition-fee-hiked-710425/

அமெரிக்க ஆப்பிள்களுக்கு 20 சதவீதம் கூடுதல் வரி நீக்கம்:

 நரேந்திர மோடி அரசாங்கம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் மீதான 20% வரியை நீக்கியுள்ளது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்திய எஃகு மற்றும் அலுமினியப் பொருள்களுக்கான சந்தை அணுகலை மீட்டெடுக்கிறது. உள்நாட்டு ஆப்பிள் விவசாயிகள் உள்பட, அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

இந்தியாவிற்குள் அமெரிக்க ஆப்பிள்கள் இறக்குமதி

முதலாவது, அமெரிக்க ஆப்பிள்களுக்கு 50% இறக்குமதி வரி விதிக்கப்படும். இந்த வரி அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு பொருந்தும்.

நரேந்திர மோடி அரசாங்கம் அமெரிக்க ஆப்பிள்களுக்கு கூடுதலாக 20% வரியை மட்டும் நீக்கியுள்ளது. இது ஜூன் 15, 2019 அன்று, அப்போதைய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீலுக்கு 25% மற்றும் பல அலுமினியப் பொருள்களுக்கு 10% வரி விதித்ததற்குப் பதிலடியாக விதிக்கப்பட்டது.

ஆப்பிள் தவிர, அமெரிக்கா பாதாம், அக்ரூட் பருப்புகள், கொண்டைக்கடலை (சானா) மற்றும் பருப்பு (மசூர்) ஆகியவற்றின் மீதும் இந்தியா வரி விதித்தது. இவை அனைத்தும் இப்போது அகற்றப்பட்டுவிட்டன.

இரண்டாவதாக, அமெரிக்க ஆப்பிள்கள் மீதான பதிலடி வரி இந்தியாவின் ஒட்டுமொத்த பழங்களின் இறக்குமதியின் வளர்ச்சியை நிறுத்தவில்லை.
மாறாக, மொத்த இறக்குமதி 2013-14ல் (ஏப்ரல்-மார்ச்) 1.75 லட்சம் டன்னிலிருந்து (எல்டி) படிப்படியாக உயர்ந்து 2018-19ல் 2.83 லிட்டாகவும், மேலும் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 4.59 லிட்டாகவும் 3.74 லிட்டாகவும் உயர்ந்துள்ளது.

மூன்றாவதாக, கூடுதல் வரி அமலுக்கு வருவதற்கு முந்தைய ஆண்டான 2018-19ல் வாஷிங்டன் மாநிலத்தில் இருந்து அமெரிக்க ஆப்பிள் இறக்குமதி 1.28 லிட்டாக உயர்ந்தது. குறிப்பாக 2022-23ல் 4,486 டன்னாக குறைந்த பிறகு, அந்த நிலைகளை மீட்டெடுப்பது எளிதாக இருக்காது.

2018-19க்குப் பிறகும் இந்தியாவின் ஆப்பிள் இறக்குமதி

2017-18 ஆம் ஆண்டு வரை இந்தியாவிற்கு ஆப்பிள் ஏற்றுமதியில் சீனா முதலிடத்தில் இருந்தது. சீனாவில் இருந்து ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இறக்குமதி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அந்த இடைநீக்கம் ரத்து செய்யப்படவில்லை. 2018-19 வரை ஏற்றுமதியில் ஒரு உயர்வை பதிவு செய்த அமெரிக்கா பயனாளியாக இருந்தது.

வாஷிங்டன் ஆப்பிள்கள் துருக்கி மற்றும் ஈரானில் இருந்து பழங்களுக்கு சந்தைப் பங்கை பெரிதும் இழந்துள்ளன. சிலி, இத்தாலி மற்றும் நியூசிலாந்து போன்ற பிற நிறுவப்பட்ட ஏற்றுமதியாளர்களை விட இந்த இரண்டு நாடுகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிற்கு சிறந்த சப்ளையர்களாக உருவெடுத்துள்ளன.

கூடுதல் வரி நீக்கம் அமெரிக்க ஆப்பிள்கள் சந்தைப் பங்கைத் திரும்பப் பெற உதவுமா?

வாஷிங்டன் ஆப்பிள்களின் அறுவடை ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் தொடக்கம் வரை நீடிக்கும். இது செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் வரை இந்தியாவில் புதிய பழங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது.

இந்தப் பழங்களின் அடுக்கு ஆயுளை அதிகரிக்க அறைகளில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்துடன் கூடிய கார்பன் டை ஆக்சைடு (CO2) மற்றும் ஆக்ஸிஜன் (O2) செறிவைக் கையாளுகிறது.

“வாஷிங்டன் ஆப்பிள்கள், மற்ற பழங்களைப் போலல்லாமல், ஆண்டு முழுவதும் கிடைக்கும். ஏனெனில், கிடங்குகளில் உள்ள பழங்களுக்கு CA சேமிப்பகத்திலிருந்து அகற்றிய பின் மற்றும் அனுப்புவதற்கு முன்பு இயற்கையான மெழுகின் மெல்லிய கோட் பயன்படுத்தப்படுகிறது. இது ஈரப்பதம் இழப்பைத் தடுக்கிறது மற்றும் சுவாச விகிதத்தை மேலும் குறைக்கிறது,” என்று ஒரு முன்னணி இறக்குமதியாளர் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து அதிகமான இறக்குமதிகள் இந்திய ஆப்பிள் விவசாயிகளை பாதிக்குமா?

2021-22ல் இந்தியாவின் ஆப்பிள் உற்பத்தி 24.37 லிட்டராக மதிப்பிடப்பட்டது, ஜம்மு & காஷ்மீர் (17.19 லி.) மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் (6.44 லி.) ஆகியவை இதில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளன.

இறக்குமதி, மறுபுறம், 4-4.5 லிட்டர் மட்டுமே. அமெரிக்க ஆப்பிள்கள் துருக்கி அல்லது இத்தாலியில் இருந்து ஆப்பிள்களை மாற்றப் போகிறது என்றால், அது மொத்த இறக்குமதி அளவுகளில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தாது.

இறக்குமதியின் அளவை விட, கூடுதல் வரியை ரத்து செய்வதற்கான முடிவின் நேரம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்கலாம். ஆப்பிள் அறுவடை அடுத்த மாத நடுப்பகுதியில் இருந்து சோலன் மற்றும் அதை ஒட்டிய HP மலைப்பகுதிகளில் தொடங்கும்.

இது சிம்லாவின் பிரதான பெல்ட்டில் ஆகஸ்ட் நடுப்பகுதியிலிருந்து செப்டம்பர் நடுப்பகுதி வரையிலும், கின்னாரின் இன்னும் உயரமான பகுதிகளில் செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் நடுப்பகுதி வரையிலும் நீண்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அறுவடை செப்டம்பரில் தொடங்கி அக்டோபரில் உச்சத்தை அடைகிறது, டிசம்பர் ஆரம்பம் வரை வருகை தொடரும்.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றில் ஆப்பிள்களை அறுவடை செய்வது அமெரிக்காவிற்கும் (மற்றும் துருக்கி, இத்தாலி, ஈரான் மற்றும் போலந்து போன்ற பிற வடக்கு அரைக்கோள உற்பத்தியாளர்களுக்கும்) இணையாக இருப்பதால், சந்தைப்படுத்தல் பருவத்திற்கு முன்னதாக விலை உணர்வில் சில தாக்கங்கள் இருக்கலாம்.

இருப்பினும், மோடி அரசாங்கம் ஒரு கிலோவிற்கு குறைந்தபட்ச விலையாக 50 ரூபாய் (செலவு மற்றும் காப்பீடு மற்றும் கடல் சரக்கு) விதித்துள்ளது, அதற்குக் கீழே ஆப்பிள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது.

குறைந்தபட்ச இறக்குமதி விலை, மே 8 அன்று அறிவிக்கப்பட்டது, “அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் ஆப்பிள்களுக்கு பொருந்தும். இதனால் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் மற்றும் உள்நாட்டு விவசாயிகளை கொள்ளையடிக்கும் விலையிலிருந்து பாதுகாக்கும்” என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/explained/govt-removes-extra-import-duty-on-us-apples-how-it-can-impact-domestic-growers-710522/

கலைஞர் கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது: நீதிபதி சந்துரு விளக்கம்

 29 6 23

karunanidhi

கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதைப் பற்றி முன்னாள் நீதிபதி கே.சந்துரு விளக்கமளிக்கிறார்.

“நள்ளிரவில் கலைஞர் கைது” புத்தக வெளியீட்டு விழா சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நீதிபதி கே.சந்துரு, “நான் இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறேன். ஒரு ஊடகவியலாளர் தான் பார்த்ததை அப்படியே எழுதி ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியம். அப்படி பத்திரிகையாளர் சுரேஷ் குமார்‌ கலைஞர் கருணாநிதி கைதை புத்தகமாக எழுதியது வரவேற்கத்தக்கது.

கலைஞர் கருணாநிதி கைது என்பது வரலாற்றில் முக்கியமானது. 2001-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு அந்த அம்மையார் ஆடாத ஆட்டம் இல்லை. கலைஞர் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நண்பர் சுரேஷ்குமார் நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளார்.

அவரது கைது சட்டப்படி நியாயமா? முன்னாள் முதல்வர் கலைஞரை நாயை விட மோசமாக கைதின் போது நடத்தி இருக்கிறார்கள். அப்படி இந்த கைதின் போது அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பதை நீதிபதி சுரேஷ்குமார் விசாரிக்க வேண்டும். நடைமுறையில் சாதாரண மக்கள் கைது செய்யப்படும்போது மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். கலைஞர் கைது ஒரு தவறான முன்னுதாரணம்”, என்றார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/kalaignar-karunanidhi-treated-very-badly-during-arrest-time-retired-justice-chandru-710433/

மணிப்பூர் மக்களுக்கு ஹீலிங் தேவை: அரசு என்னை தடுக்கிறது: ராகுல் காந்தி

 29 6 23

Manipur needs healing govt stopping me says Rahul
மணிப்பூரில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி காரில் இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். இந்த நிலையில், பிஷ்ணுபூர் பகுதியில் அவரது வாகனத் கான்வாயை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, இன்று பிற்பகல் சுராசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் எடுத்துச் சென்று அங்குள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட சென்றார்.

அப்போது, பாஜக தலைமையிலான மாநில அரசைக் கடுமையாகத் தாக்கினார். மணிப்பூரின் சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க செல்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளேன்.
அரசாங்கம் என்னைத் தடுப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மணிப்பூருக்கு ஆத்மார்த்தமான சிகிச்சை தேவை. அமைதி மட்டுமே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்” என ட்விட்டரில் தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்,“ராகுல் காந்தியின் கான்வாய் பிஷ்ணுபூர் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எங்களை அனுமதிக்கும் நிலையில் இல்லை என போலீசார் கூறுகின்றனர்.
ராகுல் காந்தியை நோக்கி மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கைகளை அசைக்கிறார்கள். எதற்காக எங்களை தடுத்தார்கள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.


source https://tamil.indianexpress.com/india/manipur-needs-healing-govt-stopping-me-says-rahul-710391/


வியாழன், 29 ஜூன், 2023

இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்..!

இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்..! பட்டமளிப்பு நிகழ்ச்சி - 04-06-2023 சோழபுரம் - தஞ்சை (வடக்கு) மாவட்டம் உரை : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)

இந்தியாவின் நிலை


Credit FB Page Manickam Tagore

சமூக வலைதள வதந்தி மூலம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பு : டிஜிபி சைலேந்திரபாபு

 

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தலைமையில் ஓய்வு பெற உள்ள தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.சென்னை உயர்நீதிமன்ற வளாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசியதாவது:”தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எங்களைப் போன்ற காவலர்களுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாகவும், காவலர்களை ஊக்குவிப்பவராகவும் திகழ்கிறார். சமூக வலைதளங்களின் மதிப்பு என்ன என்பதை டிஜிபியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவத்தை தந்துள்ளது” என்றார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பேசும் போது: “அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் மனிதாபிமானத்துடன் செயல்படுவதற்கான பயிற்சியை நான் வழங்குவேன் என்பதை முதன் முதலில் கூறிய ஒரே காவல் அதிகாரி சைலேந்திரபாபு தான். எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு காவல் அதிகாரியாக திகழ்ந்தவர். பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு எந்தவித அச்சமும் இன்றி செல்ல வழிவகை செய்தவர் டிஜிபி சைலேந்திரபாபு” என்றார்.

பின்னர் சைலேந்திரபாபு பேசியதாவது: “தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் காவல்நிலையங்களில் எந்த மரணமும் நிகழவில்லை.மனிதருக்குள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அந்தவகையில் காவல்துறைக்கும், வழக்கறிஞருக்கும் ஒத்துழைப்பு அவசியம்.மிருகங்களை போன்ற பலமில்லாதவர்கள் மனிதர்கள். ஆனால் ஒத்துழைப்பு மூலம் மிருகத்தை கூண்டுக்குள்ளும் மிருக காட்சி சாலைக்கும் நம்மால் கொண்டுவர முடியும்

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மனிதநேயத்துடன் காவல் துறை பொதுமக்களிடம் நடக்க வேண்டும் என்பதற்காக 2300 காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் புகார்கள் கனிவுடன் பெறப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் காவல்துறையில் பணியாற்றுபவர்களை தட்டிக் கொடுத்து பாராட்டி வேலை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. காவல்துறையின் தற்போதைய நிலையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இளைஞர்கள் ஏராளமானோர் இந்த துறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த வகையில் காவல்துறையில் காவல்துறையில் உதவி ஆய்வாளர்கள் 444 பேரும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள்.இதன் மூலமாக கடந்த காலங்களில் காவல்துறையில் எதிர்மறையாக நடைபெற்ற நிகழ்வுகள் குறைவதற்கான வாய்ப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காவல்துறை இணைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 36,000 ஆக இருந்து. தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரமாக குறைந்துள்ளது” என சைலேந்திரபாபு கூறினார்.


source https://news7tamil.live/possibility-of-law-and-order-being-affected-due-to-rumors-spread-on-social-media-dgp-sailendrababu.html