புதன், 7 ஜூன், 2023

தமிழ்நாட்டின் 14 இடங்களில் சதமடித்த வெயில்!! – அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

7 6 23

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம் 18 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், நேற்று 15 இடங்களில் சதம் அடித்தது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த பின்னரும், பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய உச்சம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனம்பாக்கம் மற்றும் வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கரூர் பரமத்திவேலூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.

இதனிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், வள்ளுவர் கோட்டம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Source https://news7tamil.live/14-places-of-tamil-nadu-are-hit-by-the-sun-chennai-recorded-a-maximum-temperature-of-108-degrees-fahrenheit.html


Related Posts: