12 6 23

சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ரூ.240 கோடியில் செலவில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில், 1,000 படுக்கை வசதியுடன் தயாராக உள்ளது. கடந்த 5-ஆம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது.
ஆனால், திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவா் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதால், அவரால் இந்நிகழ்வுக்கு வர இயலாது என்று ரத்து செய்யப்பட்டது.
மேலும், வேறு ஒரு தேதியில் குடியரசு தலைவர் திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினே திறந்து வைப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chief-minister-mk-stalin-will-inaugurate-guindy-multipurpose-hospital-on-june-15-694225/