சனி, 3 ஜூன், 2023

ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன??

 3 6 23

கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேரின் நிலை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது. அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது.

இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில், கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வர தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 101 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 17 பேர் பயணம் மேற்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 53 பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், 14 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், 9 பணிகளின் செல்ஃபோன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், 8 பயணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்புகள் எதுவும் உறுதி செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/odisha-train-accident-what-is-the-status-of-tamil-nadu-passengers.html