சனி, 3 ஜூன், 2023

நல்ல டிரஸ், சன் கிளாஸ் அணிந்ததற்காக தலித்தை தாக்கிய உயர் சாதியினர்; குஜராத் கொடூரம்

 குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் நபர் ஒருவர், நல்ல ஆடைகள் மற்றும் சன்கிளாஸ்களை அணிந்ததற்காக அவர் மீது கோபமடைந்த உயர் சாதியினர் அவரைத் தாக்கியதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.


பாலன்பூர் தாலுகாவில் உள்ள மோட்டா கிராமத்தில் செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது, உயர் சாதியினரால் தாக்கப்பட்ட பாதிக்கப்பட்டவரும் அவரது தாயும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

1 6 23

கண்ணாடி அணிந்ததற்காக அதிருப்தி அடைந்த தன்னையும் அவரது தாயையும் தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஜிகர் ஷெகாலியா அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை பாதிக்கப்பட்டவர் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் அவரிடம் வந்து துஷ்பிரயோகம் செய்து, ”இப்போது எல்லாம் நீ வானத்தில் பறக்கிறாய்” என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதே இரவில், புகார்தாரர் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, ​​ராஜபுத்திர குடும்பப்பெயர் கொண்ட சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் அவரை நோக்கி வந்தனர். தடிகள் போன்ற ஆயுதங்களுடன் வந்து, நீ ஏன் நல்ல ஆடை அணிந்து கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறாய் என்று கேட்டுள்ளார்கள். பின்னர் அவரை தாக்கி பால் பண்ணை பின்னால் இழுத்துச் சென்றனர்.

அவரை காப்பாற்ற அவரது தாய் விரைந்து சென்றபோது, ​​அவர்கள் அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் அவரது ஆடைகளையும் கிழித்துள்ளனர் என்று புகாரை மேற்கோள்காட்டி போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கும் எதிரான எஃப்.ஐ.ஆர் இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவுகளின் கீழ், கலவரம், சட்டவிரோத கூட்டம், பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்தல், தானாக முன்வந்து காயப்படுத்துதல், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மீது பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/india/gujarat-dalit-man-thrashed-wearing-good-clothes-685393/