5 6 23
தீட்சிதர்கள் இல்லத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளதாக புதிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில் கடந்த வாரம் திருமணம் செய்ததாக புகைப்படங்கள் வெளியான நிலையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர் சடங்கு செய்த புகைப்படம் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது சிறுவன் ஒருவன் தாலி கட்டுவதற்கு தயாராக இருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். சமீபத்தில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக புகார்கள் வெளிவந்தன் அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சில தீட்சிதர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குழந்தை திருமண விவகாரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக சர்ச்சையை எழுப்பினார், ஆளுநர் பேசிய விவகாரத்தில் இந்திய தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து மருத்துவக் குழு, போலீசார், மற்றும் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் இருவிரல் பரிசோதனை நடைபெற்றது உண்மை எனவும் குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகைப்படங்கள் வெளியானது சடங்கு செய்த புகைப்படங்கள் எனவும் தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் விளக்கம் அளித்து இருந்தார். மேலும் விசாரணை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் அறிக்கையும் சமர்ப்பித்தார்.
இந்த நிலையில் தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் சடங்கு செய்த புகைப்படம் என்று கருத்து தெரிவித்த நிலையில் தீட்சதீர்களின் சிறுமி ஒருவருக்கு சிறுவன் தாலி கட்டுவதற்கு கையில் தாலி வைத்திருக்கும் 3 வினாடிகள் உள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
source https://news7tamil.live/child-marriage-at-dikshitars-home-controversy-over-new-video-released.html