செவ்வாய், 6 ஜூன், 2023

அடுத்தது காங்கிரஸ் ஆட்சி! – கருத்துக் கணிப்பில் வெளியான பரபரப்பு தகவல்!!

 

மத்தியப்பிரதேசத்தில் அடுத்ததாக காங்கிரஸ் ஆட்சி அமையும் என   ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா’ அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

5 6 23

மத்தியப்பிரதேச மாநில  சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா’ எனும் அமைப்பு தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொண்டது.

இந்த கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 124 முதல் 135  தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால்  காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல  மத்திய பிரதேச தேர்தலில் ஆளும் பாஜக 70 முதல்  – 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும், மாநிலத்தில் அந்த கட்சி ஆட்சியை இழக்கும் எனவும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக தவிர மற்றவர்கள் 14 முதல் 17 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 சதவீத ஓட்டுகளை பெற்று ஆட்சியில் அமரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு 40 சதவீத ஓட்டுகளும், மற்றவர்களுக்கு 16 சதவீத ஓட்டுகளும் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் பாஜகவிடம் தோல்வியை தழுவி காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில் மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக வெளியாகி உள்ள இந்த கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகம் கொடுக்கும் வகையிலும், பாஜகவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.


source https://news7tamil.live/congress-rule-again-in-madhya-pradesh-small-box-india-poll-information.html

Related Posts: