வெள்ளி, 16 ஜூன், 2023

கரையை கடந்தது ‘பிபர்ஜாய்’ புயல்; கடலோர பகுதிகள் கடும் சேதம்!

 16 6 23

அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறிய, ‘பிபர்ஜாய்’ குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயல்  போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டது.இந்த புயல் மாண்ட்வி கராச்சி இடையே நேற்று (15ஆம் தேதி) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறிய, ‘பிபர்ஜாய்’ குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரை கடந்த போது மணிக்கு 125 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சம் பேர் வரையில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும் ஏராளமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தற்போது மீட்பு பணியை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


source https://news7tamil.live/cyclone-pibarjoy-crossed-the-coast-coastal-areas-are-heavily-damaged.html