சந்திராயன் – 3 இறுதிக்கட்ட வேகக் குறைப்பு வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் விடுவிக்கும் பணி நிறைவடைந்த பிறகு, லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, நிலவில் வரும் 23-ஆம் தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது
பூமியைச் சுற்றிவந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஆக. 1-ஆம் தேதி புவியீாப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது.
இந்நிலையில் நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் கடந்த 17ஆம் தேடி விடுவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ தனது டிவிட்டரில், “இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் நடவடிக்கை எல்எம் சுற்றுப்பாதையை 25 கி.மீ. x 134 கி.மீ.க்கு வெற்றிகரமாக குறைத்துள்ளது. தொகுதி உள் சோதனைகளுக்கு உட்பட்டு, நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயத்திற்காக காத்திருக்கும். இயங்கும் இறங்குதல் ஆகஸ்ட் 23, 2023 அன்று, சுமார் 17.45 மணி நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-3-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f.html