விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் நடை பயணம் தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ” எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியை பார்த்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இந்த பயத்தின் காரணமாக அவர்கள் வாய்க்கு வந்ததை பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
அண்ணாமலையின் நடை பயணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ” தமிழ்நாட்டில் அண்ணாமலையின் நடை பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது; அந்த நடை பயணம் எடுபடாது” என்று விமர்சித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thol-thirumavalavan-has-criticized-that-annamalai-pada-yatra-cannot-be-undertaken-in-tamil-nadu-739188/