இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதால், நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நாங்கள் அமர்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அவசர சட்டத்தை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
அமலாக்கத்துறை இயக்குநருக்கு 3 முறைக்கு மேல் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. பதவி நீட்டிபுக்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதி தான் என நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் என்ன நடந்தது. மீண்டும் வலுக்கட்டாயமாக பதவி நீட்டிப்பு பெறப்பட்டுள்ளது. மணிப்பூர் பிரச்னை குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மறுக்கிறார்.
ஒரு நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தான் கட்டுபடுத்த வேண்டும். டெல்லி நிரவாக மதோதாவை திமுக எதிர்க்கிறோம். இந்த மசோதா மூலம் மாநில அரசை பொம்மையாக மாற்ற முயல்கிறார்கள்.
மிட்டாய் கொடுத்து குழந்தையை ஏமாற்றுவது போல, இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயல்கிறது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. டெல்லி அரசை முடக்க பாஜக அரசு நினைக்கிறது.
மத்தியில் உள்ள ஆளும் கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 2024-ல் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நாங்கள் அமர்வோம். நாங்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வருவீர்கள்.
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.
source https://news7tamil.live/we-will-sit-where-you-sit-dayanidhi-maran-mp-speech.html