நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டை வகுப்புவாத பிரச்னைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் பல பேராபத்துகளில் இருந்து இந்தியா கூட்டணி காப்பாற்றும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்பது தொடர்பான பாஜகவினர் திட்டமிட தொடங்கி விட்டனர்.
மின்னணு வாக்கு இயந்திரங்களை அவர்கள் தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்வார்கள். இதுதொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற பல செயல்களில் அவர்கள் ஈடுபட முயற்சி செய்வார்கள்.
ஆனால் அதனை முறியடித்து இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி மத்தியில் ஆட்சி அமைக்கும். அப்போது வகுப்புவாத பிரச்னைகள்,வேலைவாய்ப்பின்மை மற்று பல ஆபத்துகளில் இருந்து நாட்டை காப்பாற்றும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
source https://news7tamil.live/india-will-save-country-from-disaster-communal-tension-mamata.html