திங்கள், 18 டிசம்பர், 2023

தென் மாவட்டங்களை கதிகலங்க வைக்கும் அதிகனமழை | மீண்டும் “ரெட் அலர்ட்” கொடுத்த வானிலை ஆய்வு மையம்!…

18/12/2023 

தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழைநீர் புகுந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் மிதமான மழை பெய்யும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலை 10 மணி ரெட் அலர்ட் (அதிகனமழை) விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:

விருதுநகர்
மதுரை
தேனி

ஆரஞ்சு அலர்ட் (கனமழை) விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:

தூத்துக்குடி
திண்டுக்கல்
கன்னியாகுமரி
கோவை
திருப்பூர்
சிவகங்கை

மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்:
ராமநாதபுரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி.

source https://news7tamil.live/heavy-rains-to-disturb-the-southern-districts-meteorological-center-has-again-given-red-alert.html