கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரித்துள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழைநீர் புகுந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் மிதமான மழை பெய்யும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரித்துள்ளது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பால் பவுடர், பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களிலிருந்தும் கூடுதலாக பால் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் போதிய அளவு பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/continued-heavy-rain-action-to-get-dairy-products-to-the-southern-districts-without-shortage.html#google_vignette