விண்வெளி துறையில் தடம்பதிக்க என்ன படிக்கலாம்?
விண்வெளி அறிவியல் துறை உலகளவில் மிகப்பெரும் மாற்றங்களை கண்டு வருகிறது. இந்திய விண்வெளி துறையின் தற்போதய சந்தை மதிப்பு ₹6,700 கோடி, Indian National Space Promotion and Authorization Center இன் கணிப்பு படி 2033 ஆம் ஆண்டிற்குள் இதன் மதிப்பு ₹35,200 கோடியாக உயரும் என கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு வாய்ப்பு மிக்க இந்த துரையில் நீங்கள் சாதிக்க உயர் கல்வியில் எந்த பிரிவுகளை தேர்வு செய்யலாம்,எந்த கல்லூரியில் படிப்பது சிறப்பாக இருக்கும் , வேலைவாய்ப்பு , ஆராய்ச்சி குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்
உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஆறாவதாக உள்ள இஸ்ரோ இந்திய அரசால் 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. துவங்கப்பட்ட காலம் முதல் பல்வேறு சாதனைகளை செய்து வந்த இஸ்ரோ விண்வெளி ஆய்வில் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மிகப்பெரும் பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது...
நிலவில் சந்திரயான் , செவ்வாயில் மங்கள்யான் , சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யாவை தொடர்ந்து மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் ,விண்ணை படம் பிடிக்க அஸ்ட்ரோசாட் (விண்வெளி தொலைநோக்கி) , விண்வெளியில் தங்கி ஆய்வு செய்வதற்கான Bharatiya Antariksha Station எனும் விண்வெளி ஆய்வு நிலையம் என தனது நீண்ட கால இலக்கினை குறித்து வைத்து அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது...
விண்வெளி ஆய்வில் உங்களின் பிள்ளைகள் பங்கு பெற அவர்களை +2க்கு பிறகு பின்வரும் உயர்கல்வி பிரிவுகளை தேர்வு செய்ய சொல்லுங்கள் நாமும் விண்ணில் தடம் பதிக்கலாம்
1. உயர்கல்வி வாய்ப்புகள்?
-----
இயற்பியல் , வேதியியல் , மெக்கானிக்கல் , எலக்ட்ரானிக்ஸ் , ஏரோநாட்டிக்கல் , எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் போன்ற உயர்கல்வி பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களை தேர்வு செய்வதன் மூலம் இஸ்ரோவில் பணியில் சேர முடியும்
2. எங்கு படிக்கலாம் ?
----
திருவனந்தபுரத்தில் உள்ள Indian Institute of Space Science and Technology (IIST) என்ற மத்திய பல்கலைகழகம் இஸ்ரோவில் நீங்கள் சென்று சேர்வதற்கான எளிமையான வழி.
A. இளங்கலை பாடப்பிரிவு :-
1. B.Tech (Electronics & Communication Engineering (Avionics)) / நான்கு ஆண்டுகள்
2. B.Tech (Aerospace Engineering) / நான்கு ஆண்டுகள்
3. Dual Degree (B. Tech + Master of Science / Master of Technology) / ஐந்து ஆண்டுகள்
தகுதி தேர்வு :-
பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல் , வேதியியல் , கணிதம் உள்ளிட்ட பாடங்களை எடுத்து படித்த மாணவர்கள். JEE mains மற்றும் JEE advance தகுதி தேர்வில் தரவரிசை மதிப்பெண் பெறுவதன் மூலம் இந்த கல்லூரியில் சேரலாம் .
கல்வி கட்டணம் :-
சராசரியாக செமஸ்டர் ஒன்றிற்கு 50,000 ருபாய் வரை கட்டணம் செலவாகும்.
கல்வி உதவி தொகை :-
JEE தேர்வுகளில் அகில இந்திய தரவரிசை பட்டியலில் இடம்பெறும் மாணவர்களுக்கு முழு கல்லூரி கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது
அதனை தொடர்ந்து வரும் செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்களின் 90 % மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில் இந்த கல்வி உதவி தொகை தொடரும்.
இது தவிர முஸ்லிம் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்படும் POST - MATRIC கல்வி உதவி தொகையினை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
B. முதுகலை பாடப்பிரிவு :-
M.Tech in Thermal and Propulsion
M.Tech in Aerodynamics and Flight Mechanics
M.Tech in Structures and Design
M.Tech in RF and Microwave Engineering
M.Tech in Digital Signal Processing
M.Tech in VLSI and Microsystems
M.Tech in Control Systems
M.Tech in Power Electronics
M.Tech in Machine Learning and Computing
M.Tech in Materials Science and Technology
M.Tech in Optical Engineering
M.Tech in Quantum Technology
M.Tech in Earth System Science
M.Tech in Geoinformatics
Master of Science in Astronomy and Astrophysics
தகுதி தேர்வு :-
அணைத்து முதுகலை பிரிவுகளுக்கும் ஏற்புடைய இளங்கலை பாடப்பிரிவுகளில் 65% மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
GATE தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும், தரவரிசை மதிப்பெண் பெறுவதன் மூலம் இங்கு சேரலாம்.
விண்ணப்பிக்க மற்றும் அதிக தகவலுக்கு https://www.iist.ac.in/ என்ற வலைதளத்தை அணுகலாம்.
IIST நிறுவனத்தை தவிர்த்து மத்திய மற்றும் மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் மேல்குறிப்பிட்ட பாடங்களை தேர்வு செய்து படிப்பது சிறப்பாக இருக்கும்
3. வேலைவாய்ப்பு ?
நாடு முழுவதும் உள்ள இஸ்ரோ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் அனைத்தும் மத்திய அரசின் ISRO Centralised Recruitment Board (ICRB) என்ற அமைப்பு மூலம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
தற்போது உள்ள வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ள https://www.isro.gov.in/CurrentOpportunities.html என்ற இணையதளத்தை அணுகவும்.
இஸ்ரோவை தவிர தமிழக மற்றும் இந்திய அளவில் விண்வெளி துறையில் இருக்கும் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு , ஆராய்ச்சி குறித்த தகவல்களை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்....
தகவல் தொகுப்பு :-
R. முஹம்மது அனஸ் B.E (ECE), B.Sc (Psy)
அறிவியல் தொழில்நுட்ப துறை ஆரய்ச்சியாளர்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
உயர் கல்வி ஆலோசனைகளை பெற +91 86080 33532 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்