19 12 2023
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தீவிரம் முற்றிலும் குறைந்துள்ளதால் இன்று டிச.19 நண்பகல் வரை மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
பலர் உணவின்றியும், வெள்ளத்தில் சிக்கியும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பேரிடர் மீட்பு குழுவானது பல வழிகளில் மக்களை மீட்டு வருகின்றனர். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வலுவிழந்துள்ளதால், மழையின் தாக்கம் குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று டிச.19 நண்பகல் வரை மழைக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதனால், வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்பது, மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவது போன்ற பணிகளின் போது மழையின் இடையூறு இருக்காது என்பது குறிப்பிடதக்கது.
source https://news7tamil.live/weakened-atmospheric-downward-circulation-less-impact-of-rain.html