pr-pandian | தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் இன்று (பிப்.13,2024) பஞ்சாப் மாநிலம் சம்புபார்டரில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றார்.
பி.ஆர். பாண்டியன் பேட்டி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் குமரி முதல் காஷ்மீர் வரை ஒன்று பட்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுமையிலும் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் எஸ் கே எம் NP அமைப்பு ஏற்படுத்தப்பட்டு போராட்ட அறிவிப்பு வெளியிட்டோம்.
மத்திய அரசாங்கம் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். விவசாயின் மீது போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெற வேண்டும்.
மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் டெல்லி நோக்கி பேரணி செல்வதற்காக விவசாயிகள் டிராக்டர்களில் அணிவித்து வந்தார்கள்.
ரசாயன பொடி கலந்த குண்டுகள்..
அவர்களை பஞ்சாப் ஹரியானா எல்லையில் சம்பு பார்டர் என்கிற இடத்தில் காவல்துறை ராணுவத்தை நிறுத்தி தடுத்து நிறுத்தினர்.
அதனை மீறி நுழைய முடியும் விவசாயிகளை ரசாயன பொடி கலந்த குண்டுகள் துப்பாக்கி மூலம் வீசப்படுகிறது. குண்டு மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. இடைவிடாது வெடிப்பதால் அந்த பகுதி போர்க்களமாக காட்சியளிக்கிறது. என் அருகில் ட்ரோன் ரசாயன புகை குண்டு வீசியதால் மூச்சு திணறல், கண் எரிச்சல் எனக்கும் ஏற்பட்டது.
ரப்பர் குண்டு வீச்சால் காயம்பட்ட விவசாயிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கொடுமைகளை மோடி அரசு அரங்கேற்றுவதால் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியாது.
உயிரை இழந்தாலும்..
உயிரை இழந்தாலும் பரவாயில்லை உரிமைகளை மீட்டெடுப்போம் என்று வீரம் நிறைந்த போராட்டத்தை துவக்கி இருக்கிறார்கள். இதற்கு அனைத்து பகுதி விவசாயிகளும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
எனவே, மோடி அரசாங்கம் தாக்குதல்களை கைவிட்டு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இந்த போராட்டம் பிரமர் கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தான் நடைபெறுகிறது என்பதை பிரதமர் உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
போராட்ட களத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் டல்லேவாலா மற்றும் அரியானா பந்தர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் அணிவகுத்து நின்றனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/pr-pandian-said-that-they-have-started-a-heroic-struggle-to-restore-their-rights-even-if-they-lose-their-lives-3728030