காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் தஞ்சாவூர் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தலைமையேற்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி தமிழ்நாட்டை அழிப்பதற்கு கர்நாடக அரசு நயவஞ்சக நடவடிக்கையின் சட்டவிரோதமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற 18 வது ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை விவாதிக்க கர்நாடகம் கோரிக்கை வைத்தது. தமிழ்நாட்டு அரசின் பிரதிநிதி அதனை மறுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி தடுத்து நிறுத்தினர்.
அதே நேரத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள் வரைவுத்திட்டறிக்கை ஆணையம் விவாதிக்க கூடாது என்று மறுப்பு தெரிவித்தால், அதனை மீண்டும் மத்திய அரசுக் அனுப்பி வைத்து கருத்து கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்று ஆணையத் தலைவர் அனைத்து மாநிலங்களும் ஒத்த கருத்தோடு அணை கட்டுவது குறித்து மத்திய அரசுக்கு அனுமதி கோரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறாமல் ஆதரவு தெரிவித்து தீர்மான நிறைவேற்ற துணை போயிருக்கிறது. இதன் மூலம் மோடி அரசும் ஸ்டாலின் அரசும் தமிழ்நாட்டிற்கு எதிராக காவிரி பிரச்சனையை மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு ஆதரவாக துணை போயிருக்கிறார்கள். ஏற்கனவே கர்நாடக எதிராக தொடங்கப்பட்ட வழக்கையும் திமுக அரசு தான் திரும்ப பெற்றது.
விவசாயிகள் வழக்கு போட்டு பெற்ற உரிமையை மீண்டும் பறிகொடுக்க திமுக தலைமை நாட ஸ்டாலின் அரசு முன்வந்திருப்பதை கண்டித்துதான் இன்றைக்கு முற்றுகையிட உள்ளோம். காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக மதித்து தண்ணீரை திறக்கவில்லை. அது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் முன் வருவதில்லை. காவிரியில் உபரி நீர் கடலில் கலப்பதை கர்நாடக அரசு குறிப்பிட்டு மேகதாது அணைக்கட்டுமாணத்தை நியாயப்படுத்த முயற்சிக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சி காலத்தில் 1963ல் தமிழ்நாடு எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லையில் ராசிமணலில் புதிய அணைக்கட்டி 64 டிஎம்சி தண்ணீர் தேக்குவதற்கு திட்டம் தயாரித்து அதனை அடிக்கல் நாட்டி வைத்திருக்கிறார். அதற்கான அடிக்கல் ஒகேனக்கல் மின்சார வாரிய அலுவலக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது இதற்கு பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதனை கைவிட்டு விட்டது.
இந்நிலையில் தற்போது மேகதாட்டு அணை கட்டி உபநீரை தடுக்கிறேன் என்று கர்நாடகா நியாயப்படுத்த முயற்சிப்பதை தடுத்து நிறுத்தி ராசிமணலில் அணைக்கட்டுவதற்கான கட்டுமான பணிகளை துவங்க வேண்டும். இதற்கு மோடி அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வெடுப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த பிஆர்.பாண்டியன், தனிநபர் குறித்து விமர்சனம் செய்ய விரும்பாதவன் நான், நீங்கள் கேள்வியை கேட்டு விட்டதால் நான் பதில் அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். அவரது பெற்றோர்கள் முதல்வரை எப்படி பெற்றெடுத்து வளத்தார்களோ, அதேபோல விவசாயிகளுடைய பெற்றோர்களும் பெற்று வளரத்துள்ளனர்.
விவசாயிகள் வாக்கை பெற்றுள்ள முதலமைச்சர் ஒட்டுமொத்தமாக தமிழகம் மின்சார பற்றாக்குறையால் சாகுபடி கருகுவதை பார்த்து விவசாயிகள் மனமடைந்து வீதியில் புலம்புகிறார்கள். காவிரமேகதாட்டு பிரச்சனைப் பற்றி கவலைப்படவில்லை கண்டு கொள்ளவில்லை.
பயிர் கருகுவதை பார்த்து கதறும் போது முதலமைச்சர் விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல முன் வராமல் கொடைக்கானல் கோடை வாசஸ்தலத்தில் ஓய்வெடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ளார்.
பேரணியை துவக்கி வைத்து பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவரும் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளருமன பி அய்யாக்கண்ணு பேசும்போது, காவிரி கர்நாடகம் தண்ணீர் விட மறுக்கிறது மேகதாது அணைக்கட்டி தமிழ்நாட்டை அழிக்க பார்க்கிறது. தமிழ்நாடு அரசு மோடி அரசும் இதனை தட்டிக் கேட்க தயங்குகிறார்கள். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்து வறட்சி ஏற்பட்டால் பாதிப்புக்கு பல கோடி ரூபாய் இழப்பீடாக கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் என்று நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால் தமிழ்நாடு அரசு அதைக் கேட்டு பெறுவதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மோடி அரசாங்கம் 24 லட்சம் கோடியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்கிறது. ஆனால் வறட்சியால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி அளவில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியாக மோடியும், ஸ்டாலினும் செயல்படுகிறார்கள்.
மேகதாட்டு அணைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் அரசு தவறுவதால் எதிர்த்து விவசாயிகள் ம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.அதற்காக தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்றுள்ளோம் என கூறினார்.
திருச்சி தீட்சகர் பாலசுப்பிரமணியம் பேசும்போது, எங்கள் அமைப்பினுடைய தலைவர் காவிரி ரங்கநாதன் காவிரி உரிமைக்கான வழக்கு போட்டு நடுவர் மன்ற அமைத்து அதன் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை உரிய முறையில் செயல்பட வைத்து தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீர் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சிக்கவில்லை. அதே நேரத்தில் விவசாயிகள் எங்கள் அனுமதியில்லாமல் அணைய கட்ட விடமாட்டோம்.அது தடுத்து நிறுத்துவதற்கு தொடர்ந்து விவசாயிகளோடு இணைந்து போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என கூறினார்.
முன்னதாக பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். அப்பேரணியில் பங்கேற்ற ஊரணிபுரம் ரவிச்சந்திரன் ரயில் நிலையம் அருகே மயங்கி சாலையில் விழுந்தார்.அவரை கள் குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.
பிறகு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர்அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது காவல்துறையினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டு இரும்பு தடுப்புகளும், அதன் மீது முள்வேலி அமைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை கண்டித்து காவல்துறைக்கு எதிராக நீண்ட நேரம் முழக்கமிட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்..
போராட்டத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சேலம் தங்கராஜ்,, கடலூர் ராமச்சந்திரன், நாமக்கல் பாலசுப்ரமணியன், மதுரை எல் ஆதிமூலம்,நாகை ஸ்ரீதர்,மயிலாடுதுறை சீனிவாசன், திருவோணம் சின்னத்துரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழக தன்னுரிமைக் கட்சித் தலைவர் வியனரசு.தாமாக விவசாய பிரிவு தலைவர் கார்த்திகேயன் | வயலூர் ராஜேந்திரன், மதுரை எம்பி. ராமன்,தஞ்சை எல் பழனியப்பன், என்.செந்தில்குமார். வி எஸ்.வீரப்பன்,
எம் மணி.பாட்ஷா ரவி மகேஸ்வரன்,பி அறிவு பு.காமராஜ்,குடவாசல் சரவணன், மயிலாடுதுறை விஸ்வநாதன், கொள்ளிடம் பன்னீர்செல்வம், செம்பனார்கோவில் பண்டரிநாதன், சேலம் தங்கவேல், சிவகங்கை, தவம் , மாவூர் சுப்பையன், வேதாரண்யம் கருணைநாதன்,தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க நிர்வாகிகள் பாலு, தங்கமுத்து உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-farmers-pr-pandian-team-protest-update-in-trichy-4531999