நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நீட் மறுதேர்வு நடத்த வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார், க ருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு, இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டி மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.
தங்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரம் என்பதால் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமை ஆகியவையும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தேர்வு முடிவுக்கு முன்பே ஒஎம்.ஆர் ஷீட் மற்றும் வினாக்களுக்கான விடைகளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட போது ஒஎம்.ஆர் ஷீட்டுடன் ஒப்பிடுகையில், மாறுபட்ட மதிப்பெண்கள் போடப்பட்டு இருப்பதாக பல மாணவர்கள் புகார்களை முன்வைத்துள்ளனர்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதே வேளையில், நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை, நேர்மையான முறையிலேயே நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்ததது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடந்து முடிந்த நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
“நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் முன்பே நீர் தேர்வு மோசடிகள் வெளிவந்துவிட்டன. நீட் வினாத்தாள் வெளியான புகாரை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. நீட் முறைகேடு 24 லட்சம் மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். I.N.D.I.A. கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர், அவர்களின் குரலை ஒடுக்க I.N.D.I.A. கூட்டணி அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.
नरेंद्र मोदी ने अभी शपथ भी नहीं ली है और NEET परीक्षा में हुई धांधली ने 24 लाख से अधिक स्टूडेंट्स और उनके परिवारों को तोड़ दिया है।
एक ही एग्जाम सेंटर से 6 छात्र मैक्सिमम मार्क्स के साथ टॉप कर जाते हैं, कितनों को ऐसे मार्क्स मिलते हैं जो टेक्निकली संभव ही नहीं है, लेकिन सरकार…
— RAHUL GANDHI (@RAHULGANDHI) JUNE 9, 2024
source https://news7tamil.live/i-will-be-the-voice-of-students-in-the-matter-of-neet-rahul-gandhi.html