ஞாயிறு, 2 ஜூன், 2024

பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்; இஸ்ரேல் அரசை கண்டித்து டெல் அவிவ் நகரில் போராட்டம்

2 6 2024

இஸ்ரேலில் டெல் அவிவ் நகரில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியிருப்பது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடா் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மே 26-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் எல்லை நகரமான ராஃபாவில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 போ் கொல்லப்பட்டுள்ளனா்

இந்த நிலையில், ஹமாஸ் இயக்கத்துடன் பேச்சுவர்த்தை நடத்தி பிணைக் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க, இஸ்ரேல் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி, சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமை (ஜூன் 1) இரவில் டெல் அவிவ் நகரில் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவிநீக்கம் செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் சா்வதேச நீதிமன்றம் போரை நிறுத்த கூறிய பிறகும் இஸ்ரேல் அரசு போரை தீவிரப்படுத்தியதைக் கண்டித்து மாா்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ராஃபாவின் மீதான தாக்குதலை நிறுத்துவது, சுயேச்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுப்பது, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட உள்ளதாக மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/continued-attacks-on-the-palestinian-people-protest-against-the-israeli-government-in-tel-aviv.html