Lok Sabha Election 2024 Results DMK Alliance Updates: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் நடந்து முடிந்தது. நடந்து முடிந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று ( ஜீன் 4ம் தேதி) எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவும் இன்று வெளியாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சிகளுக்குள் போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியின் அங்கமாக தி.மு.க உள்ளது.
தி.மு. க கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளன.
திமுக- 21, காங்கிரஸ்- 10, விசிக- 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2 , ம.தி.மு.க-1 , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1 , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- 1 என்று பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என்று தகவல் வெளியானது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-lok-sabha-election-2024-results-dmk-alliance-votes-live-updates-4740808