நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் இந்த நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு மே மாதம் நடந்த நீட் தேர்வு பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. 2024-ம் ஆண்டு நீட் தேர்வு வினாக்கள் தேர்வுக்கு முன்னதாக பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான நாடு முழுவதும் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடந்தி வரும் நிலையில், சமீபத்தில் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து டெல்லி உச்சீநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் கடந்த 7-ந தேதி பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிய அட்டவனையின் படி மீண்டும் தேர்வு நடத்த, தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
மேலும் விரைவில், மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளதால், இந்த விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், கூறி எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று, மனுவை பட்டியலிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/neet-student-2024-request-to-supreme-court-for-neet-cancellation-4754779