இந்தாண்டு பெர்சீட் விண்கல் மழை நாளை(ஆக.11) ஞாயிறு இரவு பிற்பகுதியில் தோன்றி , திங்கட்கிழமை அதிகாலை வரை நீடிக்கும். இந்த நேரத்தில், கிட்டத்தட்ட சந்திரன் இருக்காது அதனால் விண்கல் மழையை மிகவும் அழகாக கண்டு மகிழலாம்.
இரவு 11 மணிக்கு மேல் அல்லது நள்ளிரவு முதல் மறுநாள் காலை வெளிச்சம் வரை இதை காணமுடியும்.
பெர்சீட் விண்கல் மழை என்றால் என்ன?
பெர்சீட் என்ற பெயர் பெர்சியஸ் விண்மீன் தொகுப்பிலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் நடுப்பகுதியில் உச்சம் பெற்று பொழிகிறது மற்றும் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 100 விண்கற்கள் காணப்படுவதைக் கொண்ட மிக அதிகமான மழைகளில் இதுவும் ஒன்றாகும். கோடை இரவு நேர காலநிலையில் இது நிகழ்கிறது.
பெர்சீட் விண்கல் மழையை எப்படி பார்ப்பது?
பெர்சீட் விண்கற்கள் வடக்கு அரைக்கோளத்தில் எங்கிருந்தும் பார்க்க முடியும். இந்த வான காட்சியைப் பார்க்க, நகரத்திலிருந்து வெகு தொலைவில் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும், ஏனெனில் வெளிச்சம் மற்றும் காற்று மாசுபாடு இல்லாத இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும் .
lightpollutionmap.info or darksitefinder.com/maps/world.html பயன்படுத்தி light pollution கண்டறிந்து அங்கு சென்று பார்க்கலாம். மேலும் யூடியூப் பக்கத்தில் கீழே லிங்க் உள்ள Virtual Telescope Project என்ற யூடியூப் சேனலிலும் சென்று பார்க்கலாம்.
source https://tamil.indianexpress.com/technology/perseid-meteor-shower-2024-how-to-watch-it-live-6846186