வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

தமிழகத்தில் ஒரே நாளில் 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

 

தமிழகத்தில் ஒரே நாளில் 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் 56 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது தமிழகம் முழுவதும் உள்ள 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது அதன்படி, மதுரை தெற்கு மண்டல அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பார் சுஜித் குமார், சென்னை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த நிஷா, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மேலும் 32 காவல் துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வி.சசிமோகன், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக நியமனம்

திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், சென்னை ஐகோர்ட்டு வழக்குகளை கண்காணிக்கும் பிரிவிற்கான காவல் கண்காணிப்பாளராக நியமனம்

மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன், ஆவடி காவல் ஆணையரகத்தின் தலைமையகம் மற்றும் நிர்வாக துணை ஆணையராக நியமனம்

ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஜெயலட்சுமி, மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக நியமனம்

கோவை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பத்ரி நாராயணன், கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம்

சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ஈஸ்வரன், சென்னை ரெயில்வே எஸ்.பி.யாக நியமனம்

ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக இருந்த ராஜன், திருச்சி ரெயில்வே எஸ்.பி.யாக நியமனம்,

சென்னை ரெயில்வே எஸ்.பி.யாக இருந்த அன்பு, ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்

மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக இருந்த வனிதா, மதுரை நகர போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்

திருப்பூர் வடக்கு சட்டம், ஒழுங்கு துணை ஆணையராக சுஜாதா நியமனம்.

source https://news7tamil.live/56-police-officers-transferred-in-one-day-in-tamil-nadu.html