நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜின் கேள்விகளுக்கு தமிழன் பிரசன்னா அளித்த பதில்கள் பின்வருமாறு:
கெள்வி : வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் 40 திருத்தங்கள் கொண்டு வந்திருக்காங்க. அப்படி இருக்கையில் நீங்க தான் சிறுபான்மையினர்களை வாக்கு வங்கியாக பார்க்கிறீர்கள். அதனால தான் இந்த முடிச்சு போடுறீங்க. இந்த எதிர்ப்பும் அதனாலதான் என்று பாஜகவின் தங்க வரதராஜன் குற்றம் சாட்டுகிறார். அதற்கு உங்க பதில் என்ன?
பதில் : சச்சார் கமிட்டியினுடைய பரிந்துரையை நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம் என்று கிரண் ரிஜிஜு பேசினார். அதனை ஆதரித்து பாஜகவை சேர்ந்த தங்க வரதராஜன் பேசினார். சச்சார் கமிட்டியினுடைய அறிக்கையினுடைய மிக முக்கியமானது ஏழு விஷயங்கள். முதல் விஷயம் சிறுபான்மையினருக்கு கல்வியில் மேம்பாடு. இதுதான் சச்சார் கமிட்டியினுடைய மூலம், ஆதாரம். கல்வியில் மேம்பாடு அப்படின்னு
சொல்லிட்டு இந்தியாவினுடைய முதல் கல்வி அமைச்சர், இந்தியாவினுடைய முதல் ஐஐடியை கான்பூரில் தொடங்கிய அபுல் கலாம் ஆசாத் மௌலானாவினுடைய வரலாற்றை எடுத்துவிட்டு அவர் பெயரில் வழங்குகிற இஸ்லாமிய பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான உதவி தொகையை நிறுத்தியது இந்த அரசாங்கம். இப்படி இருக்க சச்சார் கமிட்டியை நீங்க எப்படி ஆதரிப்பதாகும்.
இரண்டாவது திறன் மேம்பாடு. இந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டை தவிர சிறுபான்மை இன மக்களுக்கான பொருளாதார கடன் எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறதுன்னு 10 வருஷத்துக்கு முன்னாடில இருந்து கேட்ட போது வந்த பதில் வெறும் 2% மட்டும் என்பது தான்.
மூன்றாவது, அந்த மக்களுக்கான கடன் மற்றும் நிரந்தர வியாபாரத்தை உறுதி செய்யக்கூடிய ஒரு அமைப்பு. இதுவரைக்கும் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் அது நிறைவேற்றப்படவில்லை.
ஐந்தாவது வஃக்பு. இந்த விவகாரத்தில் தங்களை ஜனநாயகத்தை போற்றுபவர்கள் என்று கூறிக்கொண்டு, அதனால் தான் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு வஃக்பு திருத்த மசோதாவை அனுப்பியிருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் ஏற்கனவே சச்சார் கமிட்டியை ஏற்றுக்கொண்டதே இதற்கு காரணம்.
ஏனென்றால் சச்சார் கமிட்டி தீர்க்கமாக சொல்வது என்னவென்றால், வக்குப் போர்டில் சட்ட திருத்தத்தை நீங்கள் கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு முன்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்பது சட்டம். அதைதான் நீங்க செய்துள்ளீர்கள். அதை செய்யாம இந்த சட்ட திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாது நீதிமன்றம்.
நிறைவா சொல்லுது இந்த மக்களை அவர்களுடைய மத உரிமைகளை பாதுகாப்பதற்கும், அரசு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படுத்தாமல், உணவு, உடை, கலாச்சாரம் பண்பாட்டை, அந்த மக்களை பாதுகாக்க வேண்டும், இதைத்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. இதை எல்லாவற்றையும் பாஜக செய்கிறதா? என்று பார்த்துவிட்டு சச்சார் கமிட்டியை நாங்க ஏத்துக்கிட்டோம்னு நீங்க சொல்லுங்க.
கேள்வி : நீங்க சொன்னீங்க இல்லையா இது இந்த வஃக்பு வாரிய மசோதா திருத்தம் வந்துச்சுன்னா இந்த அடிப்படை உரிமைகள் 14, 23, 18, 25 இது எல்லாவற்றுக்கும் எதிரா இருக்கும் அப்படின்னு, முக்கியமான முழக்கமா வைக்கிறீங்க இல்ல. அது எப்படி?
இந்த திருத்தம் செய்வதன் மூலம் அடிப்படை உரிமையையே பாதிக்கும் அப்டீனு சொல்ரீங்க?
பதில் : சச்சார் கமிட்டில வந்து 76 பரிந்துரைகள் கொடுக்கப்பட்டது. முதல் கட்டமாக 72
பரிந்துரைகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். பிறகு அது 46 ஆனது. பிறகு அது 40-ஆக சுருக்கப்பட்டது. அந்த 40 அறிக்கைகளிலும் உண்மையில் சொல்லப்பட்டிருக்கிற வார்த்தைகள் இல்லை. இடைச்சொருள்களாக எடுக்கப்பட்ட வார்த்தைகளைத் தவிர இந்த பரிந்துரையில வேறு எதுவும் இல்லை.
வக்குபாரியத்தை நிர்வகிக்கிற ஒரு அதிகாரி வேற்று மதத்திலிருந்து நியமிக்கலாம்
அப்படின்னு சச்சார் கமிட்டி அறிக்கை சொல்லி இருக்கா? அப்படி சொல்லவே இல்லை.
வேற்று மதத்தினரை வக்குபு வாரியத்தினுடைய அந்த போர்டுல நியமிக்கலாம்னு சொல்லி இருக்குன்னு கிரண் ரிஜிஜு, அமித்ஷா உள்பட பலர் பேசுறாங்க. அந்த அறிக்கை எல்லார் கையிலும் இருக்கு. அப்படி வஃக்பு வாரிய போர்டுல வேற்று மதத்தினரை நியமிக்கல்மானு எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
பிரசன்னா அவர்களுடைய பார்வையில் கீழ் ஜாதியில் பிறந்தவன். அப்படி வைத்துக்கொண்டு என்னை ராமர் கோயில் அறக்கட்டளையில் உறுப்பினர் ஆக்குவார்களா? பிறப்பால் நான் ஒரு இந்து, என்னை அவர்கள் ராமர் கோயில் அறக்கட்டளையில் உறுப்பினர் ஆக்குவார்களா? மோடியே ஆக முடியாது.
ராமர் கோயில் அறக்கட்டளையில் உறுப்பினராக ஒரு இஸ்லாமியரை நீங்க கொண்டு வந்து போடுங்க பார்ப்போம். இது எப்படி இருக்கணும்னா நீங்களும் வாருங்கள் நானும் வருகிறேன் நீங்களும் ரெண்டு முஸ்லிமை கொண்டுங்க நானும் இரண்டு தலித் இந்துவை கொடுக்கிறேன் ரெண்டு பேரும் ஒன்னா உட்காருவோம் ரெண்டு பேரும் சேருவோம். அப்படிங்கிற சமதர்ம பாதையில போறதுதானே சரி.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் காஞ்சி மடத்துக்கும் பூரி சங்கராச்சாரியார் மடத்துக்கும் நம்முடைய அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கும் சமூக நீதி வராதா? அங்கே இந்துவாக இருக்கிற சூத்திரனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிறகு எப்படி
மற்ற மதத்தினை ஏற்றுக்கொள்ள முடியும்.
நீங்க அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருக்கிற மத சுதந்திரத்தை காலில் போட்டு மிதிப்பதற்கான சட்ட திருத்தம் தான் வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்.
ரெண்டு விஷயம் சொல்லிடுறேன், முதலாவதாக சொல்றாங்க நாங்க வந்து
பெண்களுக்கு இதுல வாய்ப்பு கொடுக்கிறோம் என்று. நீங்க இந்த சட்ட திருத்தத்தின் மூலம் தான் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.
இந்த தமிழ்நாட்டில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவருடைய ஆட்சியில் வக்ஃபு வாரியத்தில் பாத்திமா முசாபர் என்பவர் உறுப்பினராக இருக்கிறார். இதே போன்று மற்றொருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது யாருடைய பெருந்தன்மை. பிறப்பின் அடிப்படையில் பெண்களை வேறுபடுத்துகிறவர்கள் நீங்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. அதைப்போலவே டெல்லி, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் வக்ஃபு வாரியத்தில் பெண்கள் இருக்கிறார்கள்.
நான் இன்னொரு விஷயம் கேட்கிறேன். இந்து அறநிலையத் துறையில் நியமிக்கப்படுகிற அதிகாரி இந்துவாகத்தான் இருக்க வேண்டும். மாற்று மதத்தை சேர்ந்தவர் அறநிலையத்துறையில் இடம்பெற முடியாது.அதைதான் இந்து அறநிலைய சட்டம் சொல்கிறது.
நம்ம மரியாதைக்குரிய நிர்மலா சீதாராமன் என்ன சொல்றாங்க, இந்து அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும். கோவில்களை விட்டு இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். ஏன் வெளியேறனும், நாங்கள் இயல்கைகளுக்கு ஆட்பட வேண்டும். நீங்க உண்டியல்ல காசு போடாதீங்க, தட்டுல காசு போடுங்கன்னு நிர்மலா சீதாராமன் பேசினாங்க. அப்ப உங்களுக்கு உங்கள் கோவிலை அரசு நிர்வகிக்க வேண்டும் என்றால் ஐயயோ பயம், ஐயயோ எங்க வருமானம் போகுதுன்னு சொல்லக்கூடிய நீங்கள், வேறொரு மதத்தில் இன்னொரு ஒரு தலையீடை எப்படி நீங்கள் அனுமதிக்க முடியும். இது மதச் சுதந்திரம் மட்டுமல்ல அடிப்படை உரிமை மட்டுமல்ல ஒரு மதத்தை இழிவுபடுத்துவது.
கேள்வி : எல்லாத்துலயும் ஒரு பிரச்சனை இருக்கு. அது காலத்திற்கு ஏற்ப அதை மாற்ற வேண்டும் என்பது சூழல். எத்தனை சட்ட திருத்தத்தை நம்ம பார்த்துட்டோம். இந்த சட்டம் காலத்தின் தேவையா இருக்கா? இல்லையா?
பதில் : இல்லை ஏன் அப்படின்னா? புல்டோசரை வைத்து எல்லா இஸ்லாமிய வீடுகளையும் இடிப்பவர்கள், மாட்டுக்கறி வைத்திருக்கிறான் பசுக்கறி வைத்திருக்கிறான் என்று மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று மனித தோலை உரித்தவர்கள். குறிப்பாக ஹிஜாப் அணியக்கூடாது என்று சொல்லி ஹிஜாபின் மூலம் அந்த மாணவிகள், ஏறக்குறைய 18000 மாணவிகளுடைய வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியவர்கள்.
முத்தலாக் சட்டம் கொண்டு வந்து உயிர் முக்கியமா ஷரியத் சட்டம் முக்கியமா என்றால் ஷரியத் சட்டம் முக்கியம் என்று சொல்லுகிற இஸ்லாமிய பெருங்குடி மக்களினுடைய மத உணர்வில் கை வைத்தவர்கள். சிறுபான்மை இன மக்களுடைய கல்வியை முடக்கியவர்கள். சிறுபான்மையின மக்களினுடைய கல்வி துறையை கல்வியினுடைய நிறுவனங்களை முடக்கி அதன் நிதிகளை முடக்கி செயல்பட விடாமல் செய்தவர்கள். பிறகு எப்படி இவர்கள் கொண்டு வருகிற சட்டம் இச்சிறுபான்மையினரை இஸ்லாமியரை பாதுகாக்கும் என்று நான் நம்ப முடியும். இவ்வாறு நியூஸ் தமிழ் கேள்வி நேரத்தில் திமுக செய்தி தொடர்பு செயலாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்திள்ளார்.
10 08 2024
source https://news7tamil.live/why-was-the-waqf-board-amendment-bill-sent-to-the-parliamentary-joint-committee.html