ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னரின் பாராட்டுகளைப் பெற்று, வேலையில் இருந்து நீக்கப்பட்ட தெற்கு காஷ்மீரின் குல்காமில் உள்ள பள்ளி ஆசிரியர் முதல் பல எம்பிபிஎஸ் மாணவர்கள் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது வரை, யூனியன் பிரதேச நிர்வாகத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாடு, பல குடும்பங்களை நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் நிர்வாகமும், FIR அல்லது சாட்சியின் படி அந்த நபர் எதிர்ப்புக்கள் அல்லது கல் கல் வீச்சுகளில் ஈடுபட்டார் அல்லது பல தசாப்தங்களுக்கு முன்பு போராளியாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன, என்று கூறுகின்றன.
உண்மையில், அரசு மற்றும் அதன் கொள்கைகள் அல்லது திட்டங்களை அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விமர்சிப்பதை கூட தடை செய்து அதிகாரப்பூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
NC துணைத் தலைவர் உமர் அப்துல்லா கூறுவது போல், தண்டனைக்குரிய அம்சத்துடன் இந்த கடினமான செயல்களும் பள்ளத்தாக்கில் "அமைதியாக" இருப்பதற்கான ஒரு காரணம் ஆகும்.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் 74 அரசு ஊழியர்களை "மாநிலத்தின் பாதுகாப்பு நலன் கருதி" எந்த விசாரணையும் நடத்தாமல், அவர்களின் நிலைப்பாட்டை விளக்கவோ அல்லது ஏன் என்று அவர்களுக்குத் தெரிவிக்கவோ வாய்ப்பளிக்காமல் பணிநீக்கம் செய்துள்ளது.
311(2)(C) பிரிவின் வழியை அரசு எடுத்துக்கொண்டது, அது ஒரு அரசாங்க ஊழியரை வாதிட தனி நபருக்கு வாய்ப்பளிக்காமல் பணிநீக்கம் செய்ய அதிகாரம் அளிக்கிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட 74 ஊழியர்களில் 67 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கையும், ஏழு பேர் ஜம்மு பகுதியையும் சேர்ந்தவர்கள். அவர்களில் மூன்று பெண்கள் - இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு அரசு ஊழியர்.
இதில் அரசு ஊழியர், முன்னாள் ஜே.கே.எல்.எஃப் போராளியை திருமணம் செய்து கொண்டார்.
அத்தகைய உத்தரவுகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து கேட்டபோது, லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “எப்ஐஆர் இல்லாத, சரித்திரம் அல்லது உறுதியான ஆதாரங்கள் இல்லாத ஒரு வழக்கு கூட இல்லை…
அரசியல் சாசனத்தில் 311வது பிரிவு உருவாக்கப்படும்போது விவாதம் நடந்தது. அரசுக்கு அச்சுறுத்தல் இருந்தால், மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால், அந்த நபருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று சர்தார் படேல் கூறியுள்ளார். அது யாராக இருந்தாலும் நீக்கப்பட வேண்டும்", என்றார்.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த மன்சூர் அஹ்மத் லாவே என்ற அரசு ஆசிரியரும் அத்தகைய ஊழியர்களில் ஒருவர்.
மே 2021 இல், பிரதமரின் ‘மன் கி பாத்’ வானொலி உரையாடலான ‘அவாம் கி ஆவாஸ்’ இல் கோவிட் போர்வீரராக அவர் பணியாற்றியதற்காக லெப்டினன்ட் கவர்னர் அவரைப் பாராட்டினார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் "மாநிலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" எனக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது கல் வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறி அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ததே இதற்கு காரணம் என அரசாங்கம் கூறியது.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர், கணினி விஞ்ஞானி, ஒரு பெண் அரசு ஊழியர், உயர்நிலைப் பள்ளியின் முதல்வர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் காவல்துறைப் பணியாளர்களுடன் 311(2)(C) இன் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்ட 74 அரசு ஊழியர்களில் லாவேயும் ஒருவர்.
பல வழக்குகளில், ஊழியர்களின் சேவைகள் நிறுத்தப்பட்ட பிறகு, அவர்களின் பயண ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன அல்லது அவர்கள் நாட்டிற்கு வெளியே வேலையில் செய்வதை தடுக்க அவர்கள் மீது லுக் அவுட் நோட்டீஸ் (LoC) பிறப்பிக்கப்படுகிறது.
இந்த ஊழியர்கள் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வுக்குப் பிந்தைய பலன்களை இழக்கின்றனர்.
இதுபற்றி ஜம்மு காஷ்மீர் போலீஸ் டைரக்டர் ஜெனரல் ஆர்.ஆர். ஸ்வைனிடம் கேட்டபோது, ’3.6 லட்சம் ரெகுலர் ஊழியர்களும் சுமார் 1.25 லட்சம் செமி ரெகுலர் ஊழியர்களும் உள்ளனர். தேசிய பாதுகாப்பு பிரிவின் கீழ் 70 பேர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது 0.014% ஆகும். மேலும் நீக்கப்பட்டவர்கள் யார்? (யுனைடெட் ஜிஹாத் கவுன்சில் தலைவர்) சையத் சலாவுதீனின் மகன்கள்.
"கடந்தகால தீவிரவாதம் அல்லது பிரிவினைவாதம் அல்லது அவர்களது உறவினர்களின் தொடர்புகளுக்காக" வேலையில் சேருவதற்கும், அரசாங்க ஒப்பந்தங்கள் மற்றும் பயண ஆவணங்களைப் பெறுவதற்கும் பலருக்கு போலீஸ் சரிபார்ப்பை அரசாங்கம் மறுத்துள்ளது.
இது குறித்து சுற்றறிக்கையோ, உத்தரவுகளோ இல்லாத நிலையில், கடந்த ஆண்டு பாஸ்போர்ட் சட்டத்தின் 10(3)(சி) பிரிவின் கீழ், மாநிலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் 98 பாஸ்போர்ட்டுகளை நிர்வாகம் ரத்து செய்தது.
இதனிடையே பாதிக்கப்பட்ட நபர்கள் நிர்வாகத்தை அணுகலாம் என்று ஆளுநர் சின்ஹா கூறினார்.
யாராவது நினைத்தால், அவர் அதை பிரதிநிதித்துவப்படுத்தலாம், நாங்கள் அதை மதிப்பீடு செய்வோம். நாங்கள் திறந்திருக்கிறோம். இரண்டு வழக்குகளில், பிரதிநிதி நேர்மையானவர்கள் எனக் கண்டறியப்பட்ட பிறகு வெரிஃபிகேஷன் வழங்கப்படுவதை நானே உறுதிசெய்தேன்.
ஆனால் நான் இப்போது எனது நடத்தையை மாற்றிக் கொள்கிறேன் என்று யாராவது சொன்னால், ஆனால் சந்தேகத்திற்குரிய கடந்த காலம் இருந்தால், நாங்கள் அவர்களுக்கு சேவை சரிபார்ப்பை எவ்வாறு வழங்க முடியும்,என்று அவர் கூறினார்.
24,000 பேர் ஆட்சேர்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆறு நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி ஸ்வைன் தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீர் போலீஸ் சிஐடி ஏராளமான நபர்களை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதில் பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் அடங்குவர், அவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் படிக்கின்றனர்.
’நான் பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறையில் வீட்டுக்கு வந்தேன். ஆனால் நான் திரும்பிச் சென்றபோது, வாகாவில் நிறுத்தப்பட்டேன். ஜம்மு காஷ்மீர் காவல்துறை எனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்ததால் திரும்பிச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
என்னுடன் அங்கு, எனது வகுப்புத் தோழர்கள் பலர் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டேன். சிறிது நேரம் கழித்து, எனது பாஸ்போர்ட்டையும் ரத்து செய்ததாக கடிதம் வந்தது. எங்களின் பொன்னான மூன்று ஆண்டுகளை இழந்துவிட்டோம். எங்களின் அனைத்து ஆவணங்களும் பாகிஸ்தான் கல்லூரிகளில் இருப்பதால் நாங்கள் இங்கு அட்மிஷன் போட முடியாது. எங்கள் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது’, என்று பெயர் வெளியிட விரும்பாத வடக்கு காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது மாணவர் கூறினார்.
கடந்த ஒரு மாதமாக, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான மியான் அப்துல் கயூம் மற்றும் நசீர் அகமது ரோங்கா உட்பட நான்கு வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
2020 இல் வழக்கறிஞர் பாபர் காத்ரி கொலை தொடர்பான வழக்கில் கயூம் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற மூன்று வழக்கறிஞர்கள் மீதும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இது ஒரு நபரை மூன்று ஆண்டுகள் விசாரணையின்றி காவலில் வைக்க அரசாங்கத்தை அனுமதிக்கிறது.
"மக்களுக்காகப் பேசிய ஒவ்வொரு நிறுவனத்தையும் அரசாங்கம் சிதைத்துவிட்டது" என்று ஸ்ரீநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
பிரஸ் கிளப்பை பூட்டிவிட்டு வழக்கறிஞர்களை பார் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுத்து நிறுத்தினர். மறுபுறம் அரசாங்கம் இணை நிறுவனங்களுக்கு வசதி செய்துள்ளது, என்றார்.
உள்ளூர் ஊடகங்களும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன.
"நாங்கள் அரசாங்க ஊதுகுழல்கள்" என்று உள்ளூர் நாளிதழின் ஆசிரியர் கூறினார்.
நாங்கள் அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எதை வெளியிட வேண்டும், எதைப் பிரசுரிக்கக் கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களைப் பெறுகிறோம், நாங்கள் பயன்படுத்த வேண்டிய மொழியைக் கூட, என்று அவர் கூறினார்.
இது குறித்து ஆளுநர் சின்ஹாவிடம் கேட்டபோது, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறேன் என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ஆனால் ஜம்மு காஷ்மீரில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படக்கூடாது. இந்த எச்சரிக்கையை மனதில் வைத்திருப்பவர்கள் எதையும் விமர்சிக்கலாம்.
உபா சட்டத்தின் கீழ் அரசு மேலும் மேலும் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. சர்வதேச அம்னெஸ்டி சபையால் (Amnesty International), பொது பாதுகாப்பு சட்டம், 'சட்டமில்லாத சட்டம்' என விவரிக்கப்பட்ட பிறகு, சர்வதேச கவனத்தை ஈர்த்ததால், காவல்துறை உபா (UAPA) சட்டத்திற்கு மாறியுள்ளது.
நீதிமன்றங்கள் அடிக்கடி பொது பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யும் போது, உபா சட்டத்தின் கீழ் ஜாமீன் பெறுவது கடினமாக உள்ளது. உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட அல்லது ஜாமீனில் வெளிவரும் புலனாய்வு அதிகாரிகளுக்கு (IOs) எதிராகவும் காவல்துறை செயல்படத் தொடங்கியுள்ளது.
பள்ளத்தாக்கில் கல் எறிதல், கோஷம் எழுப்புதல் அல்லது கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுதல் போன்ற சிறிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020 முதல் 2022 வரையிலான மூன்று ஆண்டுகளில், உபா வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு ஜம்மு காஷ்மீரில் இருந்து பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த காலகட்டத்தில், 14,000 பேருக்கு ஒரு உபா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நாட்டின் மற்ற பகுதிகளில் 8,00,000 பேருக்கு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்கள்தொகையில், மொத்த உபா வழக்குகளில் 36 சதவீதம் மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்சிஆர்பி தரவு வெளிப்படுத்துகிறது.
source https://tamil.indianexpress.com/india/sacking-staff-denying-police-approval-jammu-and-kashmir-manoj-sinha-6806766