அரசு அலுவலகங்களில் லஞ்சம்: புகார் அளிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகம் 14 7 2026
- Jul 15, 2026 08:10 IST
அரசு அலுவலகங்களில் லஞ்சம்: புகார் அளிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகம்
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் தங்களுக்கு நேரிடும் லஞ்சக் கோரிக்கைகள் குறித்து எளிதாகப் புகார் அளிக்கவும் புதிய வாட்ஸ்அப் உதவி எண் (94981 80936) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அனைவருக்கும் இந்த எண் எளிதில் சென்றடையும் வகையில், அனைத்து அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் இந்த வாட்ஸ்அப் உதவி எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசின் இந்த புதிய முயற்சியால் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
sourcehttps://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-tamil-nadu-heat-wave-july-15-senthil-balaji-arrest-tvk-mla-horse-trading-case-palani-temple-land-case-12164592





