டைரக்டர் டச்!
டைரக்டர்: சார்! ஓப்பன் பண்ணுனா!
ஈக்காட்டுத்தாங்கல்.. காலை 6 மணி.. யாருமே இல்லாத அதிகாலைப் பொழுது. வெள்ள நீர் கழுத்தளவுக்கு ஓடிக்கிட்டு இருக்கு. ஆனால் அந்த வெள்ளத்திலும் ஒரு கார். நீர் மூழ்கிக் கப்பலின் எஞ்சின் பொருத்தியிருப்பாங்கன்னு நினைக்கேன். அப்படியே நீந்தி வருது . அந்தக் காருக்குள்ளே நம்ம கதாநாயகி கண்ணாடி வழியா எட்டிப் பாக்குறாங்க. “எனிபடி அலைவ்?” என்று டைட்டானிக் படத்தில் படகில் வரும் மீட்புக் குழு கத்துவதைப் போல கத்திக் கொண்டே வர்ராங்க
அங்கே ஒரு கர்பிணிப் பெண் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறாங்க. இங்கின கட் பண்றோம் சார். அப்டியே அந்த பெண்ணை படகுல தூக்கிப் போட்டு கையாலே தள்ளிக்கிட்டு வந்து….
தயாரிப்பாளர்: யோவ்! இருய்யா! காலைல ஆறுமணி யாருமே இல்லைங்கிற, கதாநாயகி கார்ல போகுது, அங்கின படகு எப்புடியா வந்திச்சி?
டைரக்டர்: சார்! தமிழ்படத்துல லாஜிக் பாக்கக் கூடாது. கதைய மட்டும் கேளுங்க! அப்டியே கார்ல ஏத்தி கொண்டு போய் ஆஸ்பத்திரியில சேக்கிறாங்க சார். ஆஸ்பத்திரியில குழந்தை வீல்னு கத்திக்கிட்டே பொறக்குது சார்! பொறந்த உடனே அந்தக் குழந்தை தன்னை காப்பாத்தின கதாநாயகிய பாத்து ஒரு பாட்டு பாடுது! இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை! அப்டின்னு பாடுது.
தயாரிப்பாளர்: யோவ்! குழந்தை எப்பிடியா பாடும்?
டைரக்டர்: சார் சும்மா இருங்க சார்! இந்தக் கதைய புதிய தலைமுறையில சொன்ன போது அவங்களே கேள்வி கேட்காம நெசமுன்னு நம்பிட்டாங்க! நீங்க ஏன் சார் கேக்குறீங்க?
தயாரிப்பாளர்: படத்தோட பேர் என்னய்யா?
டைரக்டர்: டைட்டானிக் அக்கா!!!

ஆக்கம்.சகோ: அஹ்மத் கபீர்.