செவ்வாய், 15 டிசம்பர், 2015

விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிராவில் நடப்பு ஆண்டில் அக்டோபர் 31-ம் தேதி வரை 725 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து வேளாண் துறை இணை அமைச்சர் மோஹன்பாய் குந்தேரியா எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்த போது, “ஜனவரி முதல் அக்டோபர் 2015 வரை மகாராஷ்டிராவில் வேளாண்மை தொடர்பான காரணங்களுக்காக 725 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தேசிய குற்றப்பதிவேடு 2014-ம் ஆண்டில் 2568 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக பதிவு செய்துள்ளது, 2015-ம் ஆண்டுக்கான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை” என்றார்.
மேலும் ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர், “மகாராஷ்டிராவில் 2013-ம் ஆண்டு 38.42 லட்சம் ஹெக்டேர்கள், 2014-ல் 112.46 லட்சம் ஹெக்டேர்கள், 2015-ல் 53.11 லட்சம் ஹெக்டேர்கள் நிலப்பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசு கொடுத்த தகவல்களின் படி இதற்கான நிவாரணமாக 2013-ம் ஆண்டு ரூ. 1,293.82 கோடியும், 2014-ல் ரூ.3,973 கோடியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.