சவூதி அரேபியாவில் அண்மையில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதை சவூதி அரேபிய அரசு பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தது.
சவூதி அரேபிய நீதிமன்றம் நிறைவேற்றியுள்ள இந்த மரண தண்டனை குறித்து உலகளாவிய ஊடகங்களும், ஊடகங்களின் விமர்சனம் குறித்து அப்படியா என்று மனித உரிமை பேசும் போலி மனித உரிமை ஆர்வலர்களும் சவூதி அரேபியாவை பற்றி கொக்கரிக்கத்தொடங்கியுள்ளனர்.
உலகின் எங்காவது ஒருமூலையில் குண்டுவெடிக்கும் போதும் அதனால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட போதும் அதிகமான மனவேதனையுடன் இந்த காட்டுமிராண்டித் தனமான செயலைச் செய்பவர்களைக் கொன்று குவிக்க வேண்டும். அவ்வாறு அவர்களை கொன்று மக்களைக் காப்பாற்ற வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கும் அந்த எண்ணத்தை சவூதி அரேபிய அரசு சமரசம் செய்து கொள்ளாமல் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் செய்த குற்றம் ஒப்புக்கொள்ளப்பட்ட பின் தண்டனை நிறைவேற்றினால்....
இவர்களுக்கு கோபம் வந்து சவூதியில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளை உலகம் ஆதரிக்கிறதா என தலைப்பிட்டு கொல்லப்பட்டவர்களை தியாகிகளாக சித்தரிக்கின்றனர்.
பில்லா, ரங்கா, சந்தனக் கடத்தல் வீரப்பன் போன்ற சமூக விரோதிகள் எல்லாம் தியாகிகள் ஆக்கப்படக்காரணம் இவர்கள் தான்.
சவூதி அரேபியாவில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் எந்தப் பள்ளியில் இன்று குண்டு வெடிக்குமோ என பயந்து மக்கள் பள்ளிவாசலுக்குள் நுழைய விடாத படிக்கு அவர்களை தடுத்து அச்சுறுத்தும்படி குண்டுகளை வெடிக்க செய்து நல்லவர்களாக வேஷமிட்ட அந்தப் புல்லுருவிகளை ஆதரங்களுடன் கைது செய்து முறையாக நடைபெற்ற விசாரணைக்கு பின் தான் தண்டனை நிறைவேறறியுள்ளனர்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம், யாருக்காகவும் சட்டமும், நீதியும் வளையாது என்று உலகிற்கே சவூதி அரேபியா செய்துள்ள பிரகடனம் மனிதநேயத்தையும், உயிரின் மதிப்பையும் நேசிக்கும் ஒவ்வொருவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.