சனி, 9 ஜனவரி, 2016

பார்த்தீனியம் செடி

Enathi Poongkathirvel's photo.

பார்த்தீனியம் செடி ஏற்படுத்தும் விளைவுகளை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் தகவல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வருகிறது. இதுவும் அமெரிக்க நிலாவகைத் தாவரமாகும். விவசாயத்திற்கும் , பொதுமக்கள் வாழ்விற்கும் பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கும் செடி வகைகளில் முதல்நிலையில் இருக்கின்றது.
இவை சருமநோயான சருமவழல், சொறி/கரப்பான் நோயை உண்டாக்குகின்றன. இவை ஆச்துமா என அறியப்படும் ஈளநோய்/ஈழைநோயையும்; குருதிசெவ்வனு நலிவு (ஈசினோபீலியா) எனப்படும் நோயை உண்டாக்குகிறது. வளிமண்டலத்தில் இதன் பூவிலிருந்து வெளிப்படும் துகள் கலந்து சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.
தொடர்ந்து பேசுவோம்! தெளிவுருவோம் !! களமிறங்குவோம் !!
- பார்த்தீனியம் ஒழிப்பு இயக்கம்
தமிழ்நாடு.