புதன், 13 ஜனவரி, 2016

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?


“நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டி விட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டுமென்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை. அந்தப்பகுதி இதுதான்.undefined
முகலாயர் படையெடுப்பு என்றும், வெள்ளையர் வருகை என்றும் நாம் பாடம் சொல்லித்தருகிறோம். முகலாயர்கள் இங்கு வந்து இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனையைக் கட்டி ஆட்சி செய்தார்கள். இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.
ஆனால் ஆங்கிலேயர்கள் இங்குள்ள வளங்களை சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டை தம் நாடாக ஒருபோதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பகதூர்ஷா ''இந்த நாட்டில் என் உடலை புதைக்க ஆறுகெஜம் நிலம் கிடைக்கவில்லையே என்று கண்ணீர்க் கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார்'' என்று கூறியிருகிறார்.
இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவ்ர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லலாம் என்பது நான் வைத்த விவாதம்"
சிங்கப்பூர் ஐஃபா கலை விழாவில் கமலஹாசன்.
(மீள்பதிவு)

Related Posts: