ஞாயிறு, 10 ஜனவரி, 2016

எது கருத்துச் சுதந்திரம்?!


கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கல்யாண் ராமன் கைது - H.ராஜா.
எது கருத்துச் சுதந்திரம்?
_______________________
இந்திய கிரிகெட் அணித் தலைவர், மகேந்திர சிங் தோனி மீது (நான் பெயிலபில்)பினையில் வெளி வர இயலாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரணம், இந்துக்கள் வழிபடும் விஷ்னு போன்று, தோனி அலங்கரிக்கப்பட்டு, அவருடைய ஒவ்வொரு கையிலும் ஒரு பொருளைப் பிடித்திருப்பதைப் போன்று உருவகம் செய்யப்பட்டுள்ளது.
அப்படி உருவகம் செய்யப்பட்டதில், தோனியின் வலது கையில் ஷூவைப் பிடித்திருப்பதைப் போன்று உள்ளது. இதற்கு அனுமதியளித்த தோனி, இந்துக் கடவுளை இழிவுபடுத்தி விட்டதாக அவர் மீது பினையில் வெளியில் வர இயலாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது இந்துக்களின் உரிமை, அவ்வுரிமையை அரசு மதிக்க வேண்டும். காவல் துறை செயலாற்ற வேண்டும். இதில் எந்தத் தவறும் கிடையாது.
இதை கருத்துச் சுதந்திரம் என்று யாரும் ஏற்றுக் கொள்ள இயலாது. இதை காவிகளும், ஆரியர்களும் வரவேற்கின்றனர். அது அவர்களின் உரிமை தொடர்பான விடயம். அதை நாம் கொச்சைப்படுத்தவும் இயலாது.
எனவே, இந்திய கிரிகெட் அணியின் தலைவர் மீது எடுத்துள்ள நடவடிக்கை எப்படி மிகச் சரியோ, அதே போன்ற பினையில் வெளி வர இயலாத நடவடிக்கை கல்யாண் ராமன் மீது எடுக்கப்பட வேண்டும்.அது தான் இந்திய அரசும், தமிழக அரசும் சரியான முறையில் நடக்கிறது என்பதற்கான சான்று.
ஏனெனில், கல்யாண் ராமன், இசுலாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் முகம்மது நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் மனைவி மீதும் இழிவான விமர்சனத்தை வைத்துள்ளான். அது மட்டுமல்லாது, தமிழகத்தில் இசுலாமியர்கள் மீது மிகப் பெரும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட சதி தீட்டியுள்ளான் என உளவுத் துறை மற்றும் காவல் துறை கண்டறிந்துள்ளது.
இதற்கான ஆதாரங்கள் வெளிப்படையாக அவன், முகநூலிலே பதிந்த பதிவுகளே சான்றாகும்.
இப்படி இந்திய மற்றும் தமிழத்தின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ள, கல்யாண் ராமன் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு சார்பற்றதாகச் செயல்படாது என்கிற நம்பிக்கை பூத்திருக்கிற சூழலில் அது முழுமையானதாக இருக்கும் என நம்புவோமாக.

Related Posts: