மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வரலாறுகளை திரித்து எழுதுதல், கல்வியை காவிமயமாக்குதல் உள்ளிட்ட வேலைகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மோடியை பின்பற்றி பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில கல்வி வாரியத்தின் கீழான 8–ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முதல் பிரதமர் நேரு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இப்போது புதிய பாடபுத்தகத்தில் அந்த பாடங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் புதிதாக இந்துத்தாவா கொள்கையில் ஈர்ப்புடையவர்களின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.மகாத்மா காந்தி, வீர சாவர்க்கர், பகத் சிங், பால கங்காதர திலகர், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் பற்றிய பாடம் இடம்பெற்றிருந்தும், நேரு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதுகாங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதையொட்டி போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சச்சின் பைலட் கூறி உள்ளார்.பாஜக அரசின் இந்த எதேச்சதிகார போக்கிற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 10 மே, 2016
Home »
» ராஜஸ்தான்: காவிமயமாகும் கல்வி – பள்ளிகளில் நேரு பாடம் நீக்கம்
ராஜஸ்தான்: காவிமயமாகும் கல்வி – பள்ளிகளில் நேரு பாடம் நீக்கம்
By Muckanamalaipatti 6:14 PM