தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதனை அடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக செய்துவந்தன. இந்த நிலையில் தேர்தலில் முறையான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவே உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட சில கட்சிகள் வழக்கு தொடர்ந்து இருந்தன.
இந்த வழக்கு விசாரணையில் அரசியல் உள்நோக்கத்துடன் தேர்தல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறி தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்த உயர்நீதிமன்றம் தேர்தலையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், வரும் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
October 04, 2016 - 03:25 PM