வெள்ளி, 16 டிசம்பர், 2016

பதஞ்சலி பொருட்களில் தரம் இல்லை #11லட்சம் அபராதம் டெல்லி நீதிமன்றம் உத்தரவு ..!


பதஞ்சலி பொருட்களில் #மாட்டுமூத்திரம் கலக்கபடுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது அதன் தொடர்ச்சியாக..!
பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ11 லட்சம் அபராதம் விதித்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
யோகா குரு ராம் தேவ் நடத்தி வரும் பதஞ்சலி ஆயுர் வேத நிறுவனம் பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் தற்போது ரூ 5000 கோடியாக உள்ளது.
மற்ற நிறுவனங்களின் பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தங்களது லோகோவை பயன்படுத்தி தவறாக விளம்பரப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தின் #தேன் மற்றும் #உப்பு போன்ற பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவில் பதஞ்சலி நிறுவன பொருட்களில் #தரம்இல்லை என்பது நிரூபணம் ஆனது.
இதைத்தொடர்ந்து 2012 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஹரித்வார் கோர்ட் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ11 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பதஞ்சலி பொருட்களில் மாட்டு மூத்திரம் கலப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது தற்போது பல ஆய்வுகளுக்கு பிறகு நீதிமன்றமும் தரமில்லை என்று அறிவித்துள்ளது ஆகவே பதஞ்சலி பொருட்களை தவிர்ப்பது நல்லது..!
யோகாவை வைத்து தன் பிஸ்னஸ்க்கு விளம்பரம் அமைத்த #பாபாராம்தேவ் போன்ற வியாபாரி சாமியார்களிடம் நல்ல பொருட்களை எதிர்ப்பார்ப்பது நம் தவறுதான்..
புறக்கணிப்போம் #பதஞ்சலி பொருட்களை..! #Patanjali

Related Posts: