சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டு முதல் வாரத்திலே பூமிக்கு மிக அருகில் கடக்கவுள்ள வால் நட்சத்திரம்..!

புத்தாண்டு தொடக்கத்தில் பூமிக்கு மிக அருகில் வால் நட்சத்திரம் ஒன்று கடந்து செல்ல உள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் வாரத்தில் C/2016 U1 NEOWISE எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். NEOWISE என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது.
எரிக்கல் மற்றும் வால் நட்சத்திரங்களின் பயணங்கள் குறித்து ஆய்வு செய்ய NEOWISE என்ற தொலைநோக்கியை விண்வெளிக்கு நாசா அனுப்பியது. இதன் ஆய்வின்படி ஜனவரி முதல் வாரத்தில் பூமிக்கு மிக அருகில் வால் நட்சத்திரம் ஒன்று கடந்து செல்ல உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரமானது மிகவும் பிரகாசமாக இருக்கும் எனவும் பைனாக்குலர் கருவி மூலம் காணமுடியும் எனவும் நாசா விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமிக்கு மிக அருகில் உள்ள கோளான புதன் வழியாக கடந்து செல்லும் இந்த நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.